Laapataa Ladies: "தலையை மூடி முக்காடு போட்டுட்டீங்க. பிறகு எப்படி நிமிர்ந்து பாக்கறது?" ஆஸ்கர் பந்தயத்துக்குச் செல்லும் லாபதா லேடீஸ்..!
நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23, சென்னை (Cinema News): திரைத்துறையின் உயரிய விருதாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவதுதான் ஆஸ்கர் விருது. இந்த விருதினை வாங்குவது அனைவருக்கும் வாழ்நாள் கனவாகவே இருக்கும். 96 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது (Oscar 2025) விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகள் தற்போது நடந்து வருகின்றன. Silk Smitha: நடிகை சில்க் சுமிதாவின் நினைவுநாள்; அன்னதானம் வழங்கி, மலர்தூவி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!
லாபடா லேடீஸ்: அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்த லாபடா லேடீஸ் (Laapataa Ladies) படம் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான கேட்டகிரியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து மொத்தம் 29 பாதங்கள் இதில் என்ரியான நிலையில் லாபடா லேடீஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலில் திரையரங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் பிறகு ஓடிடியிலிம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை தன்னுடைய முன்னாள் கணவர் அமீர்கானுடன் இணைந்து கிரண் ராவ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப்புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவர்களின் உணர்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ்.