Mohini Dey On A R Rahman: "ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி" வதந்திகள் குறித்து மோகினி டே வெளியிட்ட வீடியோ..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26, மும்பை (Cinema News): உலகமே கொண்டாடும் இசையமைப்பாளர் ஆஸ்கர் வென்ற ஏ ஆர் ரஹ்மான் (AR Rahman). எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லக் கூடியவர். இவர் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்து இருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து: இதுகுறித்து சாய்ரா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (AR Rahman Divorce), திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு இது. ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும், சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன. இந்த முரண்களை சரி செய்து இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டதாக உணர்கிறோம் என்று கூறப்பட்டது. Sathyaraj on Kanguva Review: "தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையில்லை" - கங்குவா விமர்சனங்கள் குறித்து நடிகர் சத்யராஜ் காட்டம்.!
மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கத்தை பதிவிட்டு இருந்தார். அதில், “தங்கள் திருமணம் வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைக் தேடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்று பதிவிட்டு இருந்தார்.
மோகினி டே விவாகரத்து: சாய்ரா பதிவு வெளியிடுவதற்கு முன்பே ஏ.ஆர் ரகுமானிடம் வேலை பார்க்கும் மோகினி டே (Bassit Mohini Dey) என்பவரும் தன் விவாகரத்து செய்தியை அறிவித்து இருந்தார். மோகினி டேய் பாசிஸ்ட் இசையமைப்பாளராக சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய கணவரை பிரிவதை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். இதனால் ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்திற்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்தநிலையில், வீடியோ வெளியிட்டு சர்ச்சைகளுக்கு மோகினி டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், ‘எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. எங்களுக்குள் பரஸ்பர மரியாதை இருக்கிறது. அதனால் தயவு செய்து எங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்குள் மரியாதை கொடுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)