Sathyaraj (Photo Credit: Instagram)

நவம்பர் 26, மும்பை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவான கங்குவா, நவம்பர் 14, 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்கள்:

இப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தின் வெளியீடுக்கு முன்பு படம் நெருப்பாக இருக்கும், பாண் இந்திய அளவில் வாயை பிளந்து பார்ப்பார்கள் என சூர்யாவும், ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், ஒளிப்பதிவு மிகப்பெரிய வெற்றியை அடையும் என வெற்றி பழனிசாமியும் பேசி இருந்தனர். இதனிடையே, படம் வெளியானதும் கலவையான விமர்சனங்கள் வெளியாகி படக்குழுவிக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் நாமினேட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கா? வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!

வசைபாடலை எதிர்கொண்ட படம்:

படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் இசை ரீதியாக பெரும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதிக இரைச்சல் சத்தத்தால் பார்த்தவர்களுக்கு தலைவலி உண்டாக, அவர்கள் திரைப்படம் பார்க்க வந்து தலைவலி ஏற்பட்ட கடுப்பில் மொத்த படத்தையும், தயாரிப்புக்குழுவையும் கடுமையாக வசைபாடிச் சென்றனர். இந்நிலையில், நடிகை ஜோதிகா, "தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய, தாக்கிப் பேச யாருக்கும் உரிமையில்லை" என தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் (Sathyaraj Condemn on Kanguva Negative Review) கண்டனம்:

இதுகுறித்துப் பேசியிருக்கும் நடிகர் சத்யராஜ், "விமர்சனங்கள் நல்ல படங்கள் ஓடுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதேசமயம் சிலர் கட்டம் கட்டி, உள்நோக்கத்துடன் தவறான நோக்கத்தில் கடுமையான விமர்சனங்களை செய்கிறார்கள். படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமையுண்டு, ஆனால், தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய, தாக்கிப் பேச யாருக்கும் உரிமையில்லை. படத்தில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி, தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விமர்சனம் செய்யுங்கள். அந்தப் படத்தையே காலி செய்யும் அளவிற்குக் கடுமையான விமர்சனங்களை செய்யாதீர்கள். படத்தை விமர்சனம் செய்யும் மக்கள் படத்தின் நிறை, குறைகளைச் சொல்லுங்கள். தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசி, கடுமையாக விமர்சிக்காதீர்கள்" என்று பேசியிருக்கிறார்.