Squid Game Season 2: ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் டீசர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!
கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஸ்குவிட் கேம் 1-ஐத் தொடர்ந்து, இரண்டாவது ஸ்குவிட் கேம் சீரிஸ் விரைவில் வெளியாகிறது.
நவம்பர் 01, சியோல் (Cinema News): கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலகளவில் வெளியான ஸ்க்விட் கேம் (Squid Games) வெப்ஸீரில், மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனால் பல மொழிகளிலும் ஸ்குவிட் கேம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த தொடரை பொறுத்தவரையில், கடன் இருப்போரை தேர்வு செய்து, தனிப்பட்ட விளையாட்டு ஒன்றில் பங்கேற்று வெற்றியடைந்து, அதன் வாயிலாக கிடைக்கும் பல கோடிக்கணக்கான தொகையை பெற்று கடனை அடைக்கலாம் என்ற எண்ணத்தில் கேமுக்குள் செல்லும் நபர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியும், அதில் நடக்கும் சுவாரஸ்யமும் காண்போரை பதறவைத்தது. இறுதிவரை எத்தனை பேர் போட்டியில் தாக்குப் பிடித்தனர் என்பதுதான் கதை. Kanguva Editor Nishadh Yusuf: கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மறைவு.. திரைத்துறையினர் அதிர்ச்சி.!
ஸ்க்விட் கேம் 2 (Squid Game 2):
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு உட்பட பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்ற நிலையில், 2-ஆம் பாகத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் மாதம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், 2024 டிசம்பர் மாதம் 26ம் தேதியில் சீரிஸ் உலகளவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்குவிட் கேம் 2ம் பாகத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, 26 டிசம்பர் 2024 அன்று ஸ்குவிட் கேம் உலகளவில் நெட்பிளிக்ட்ஸில் வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளிலும் அவை மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
ஸ்குவிட் கேம் சீசன் 2-ன் டீசர் காட்சிகள்: