Venom The Last Dance Review: வெனம் தி லாஸ்ட் டான்ஸ் திரைவிமர்சனம்: அரைத்த மாவையே அரைக்கும் வேரியன்ட்டு கதை.. கதறும் மார்வல் ரசிகர்கள்..!
டாம் ஹார்டி திரைக்கதை எழுதி, தயாரித்து நடித்துள்ள வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
அக்டோபர் 25, கலிபோர்னியா (Cinema News): டிஸ்னிக்கு சொந்தமானது மார்வெல் ஸ்டூடியோஸ் ஆகும். மார்வெல் ஸ்டூடியோஸின் சினிமாட்டிக் யுனிவெர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தோர் போன்ற மார்வெல் ஸ்டூடியோஸின் கதாபாத்திரங்கள் ஆக்ஷன் அட்வென்ச்சரில் எப்போதும் குறை வைத்தது இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாகவே மொக்கையான படங்களின் மட்டுமே மார்வல் கொடுத்து வருகிறது. இதனால் மார்வல் எப்போது கம்பேக் கொடுக்கும் என்று அனைவரும் காத்திருந்தனர்.
வெனம் தி லாஸ்ட் டான்ஸ்: இந்நிலையில் வெனம் மூன்றாம் பாகமான வெனம் தி லாஸ்ட் டான்ஸ் படம் வெளியாகியுள்ளது. ஸ்பைடர் மேன் காமிக்ஸ்களின் மிக பிரபலமான வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ‘வெனம்’ கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வெனம்’ படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ’வெனம் 2’ கடந்த 2021ல் வெளியானது. இந்த நிலையில் இப்படவரிசையின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இன்று வெளியானது. டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ (Venom: The Last Dance) படத்தின் திரைவிமர்சனத்தை இப்பதிவில் காணலாம்.
படத்தின் கதை: ஏற்கனவே பார்த்த பல மல்டிவெர்ஸ் படங்களில் இடம்பெற்ற அந்த வாய்டு இடமும், அனைத்து உலகத்துக்கான வேரியண்டுகள் என இந்த படத்திலும் அதே டெம்பிளேட் தான். இந்த ஆண்டு வெளியான டெட்பூல் படத்திலும் ஏகப்பட்ட டெட்பூல் வேரியன்ட்களும், வால்வரின் வேரியன்ட்டுகளும் இடம்பெற்றிருக்கும். அதை இந்த படத்திலும் காணலாம். IIFA Utsavam 2024: ஐஃபா உற்சவம் 2024.. கடல் கன்னி போன்று வந்த இரண்டு கனவு கன்னிகள்.!
பிளஸ்: டாம் ஹார்டி மற்றும் 2012 படத்தில் நாயகனாக நடித்த சிவெட்டல் எஜியோஃபர் இந்த படத்திற்கு பெரிய பிளஸ். ஒளிப்பதிவு, பின்னணி இசை, சிஜி என அனைத்துமே அசத்தல் ஆக உள்ளது. ஐமேக்ஸ் 3டி எல்லாமே சிறப்பாகவே உள்ளது. சிம்பியார்ட்ஸின் அட்டகாசங்கள், ஒரு காட்சியில் சிம்பியார்ட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் காட்டப்படும் இடம் என மாஸ் சீன்கள் உள்ளன. முதல் பாதி முழுவதுமே அட்டகாசமாக படம் நகர்கிறது.
மைனஸ்: இரண்டாம் பாதியில் ரம்பம் போட ஆரம்பித்து விடுகின்றனர். கிளைமேக்ஸ் காட்சிகள் எமோஷனல் கனெக்ட் பெரிதாக ஒட்டவில்லை. வெனம் ரசிகர்களையே இந்த படம் ஓரளவுக்குத்தான் திருப்திப்படுத்துகிறது. நார்மல் ரசிகர்களுக்கு படம் வொர்க்கவுட் ஆவது கேள்விக்குறிதான். குழந்தைகள் இந்த படத்தை ரொம்பவே என்ஜாய் செய்வார்கள். ஸ்பைடர்மேன் போஸ்ட் கிரெடிட்டில் வருவார் என்று எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.
மொத்தத்தில் வெனம் தி லாஸ்ட் டான்ஸ் குழந்தைகள் கொண்டாடும் வெற்றி ஆகும்.