Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!
கன்னட பட நடிகரும், இயக்குனருமான துவாரகிஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 16, சென்னை (Chennai): கன்னட திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகரான துவாரகிஷ் (Dwarakish) மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 81. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளநிலையில், இவரின் உடல் ரசிகர்கள், குடும்பத்தினர், மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி, பல வெற்றி படங்களை இயக்கியவர். குறிப்பாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த 'அடுத்த வாரிசு' மற்றும் ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை என்கிற படங்களை இயக்கி தயாரித்துள்ளார். TN Weather Report: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இவர் ரஜினிக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே இவரது மறைவு ரஜினியை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது எக்ஸ தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் அந்தப் பதிவில், "எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடன் நான் பகிர்ந்த இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன. இச்சமயத்தில் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.