CID Sakunthala Passes Away: பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!
பழம்பெரும் தமிழ் நடிகை சகுந்தலா பெங்களூருவில் காலமானார்.

செப்டம்பர் 18, பெங்களூர் (Cinema News): பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் (Sakunthala Passed Away) உள்ள தனது மகள் வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அவரின் இறப்புக்கு திரைப்பிரபலங்களும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சினிமாவிலிருந்து விலகிய பின் சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
தமிழ் நடிகை சகுந்தலா: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சிஐடி சகுந்தலா (CID Sakunthala) என்று மிகப் பிரபலமாக அழைக்கப்படும் அருணாச்சலம் சகுந்தலா அவர்கள், 1960-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் கோலோச்சி, 600-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களிலும் திரையில் தனி முத்திரை பதித்தவர். திரையுலகில் நான்கு தலைமுறைகளைக் கடந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
மக்கள் திலகம் திரு எம் ஜி ஆர் அவர்கள், நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள், மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்கள் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களோடு இன்றளவும் மனதில் நிற்கும் பல கதாபாத்திரங்களில் மிளிர்ந்து, தமிழ்த் திரையுலக வரலாற்றில் தன் சுவடுகளை பதித்தவர். காண்போரை கவர்ந்திழுக்கும் தனது நடனத் திறமையினாலும், நடிப்பு ஆற்றலாலும், ஆயிரக்கணக்கான ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்த பெருமைக்கு உரியவர். Priyanka Deshpande Controversy: பிரியங்கா கணவரைப் பிரிந்த காரணம்.. புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
கைதி கண்ணாயிரம், படிக்காத மேதை, ஒளி விளக்கு, சி ஐ டி சங்கர், வசந்த மாளிகை, தவப்புதல்வன், பொன்னூஞ்சல், அன்பைத் தேடி, ரோஜாவின் ராஜா, அதிர்ஷ்டக்காரன், இமயம், வண்டிச்சக்கரம், புதிய ராகம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாக குடி கொண்டவர். அன்பான இவரது அணுகுமுறையால் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினராகவும், குறிப்பிடத்தகுந்த மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சிஐடி சகுந்தலா அவர்கள்,17/09/2024 அன்று இயற்கை எய்தியது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், எங்கள் உறுப்பினர்களுக்கும் ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும். அவர்தம் நினைவும், புகழும் என்றென்றும் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீடித்து நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க அவரது புகழ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)