Gal Gadot blessed with baby: வொன்டர் வுமன் பட நடிகையின் தற்போதைய நிலை - 4-வது குழந்தையை பெற்றெடுத்தார்..!

4-வது குழந்தையை பெற்றெடுத்த வொன்டர் வுமன் பட நடிகை ஹால் ஹடொட் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Gal Gadot (Photo Credit: Instagram)

மார்ச் 07, வாஷிங்டன் (Cinema News): இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நடிகை ஹால் ஹடொட் (Gal Gadot) நடித்த வொண்டர் வுமன் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்திரமான வொண்டர் வுமனாக ஹால் ஹடொட் நடித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான ஜரோன் வர்சனாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், 2011 இல் அல்மா, 2017 இல் மாயா மற்றும் 2021 இல் டேனியலோ என 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமானார். தற்போது அவருக்கு 4-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகளுக்கு ஓரி என்று பெயர் சூட்டியுள்ளார். BMW i5 Flow NOSTOKANA: அனிமேஷனாகும் பாடி பேனல்.. பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு..!

வாழ்த்து மழை: 4-வது குழந்தை பெற்றெடுத்த நடிகை ஹால் ஹடொட்டிற்கு ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் தனது குடும்ப வாழ்க்கையை முடிந்தவரை தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஹால் ஹடொட் கடைசியாக ஸ்பை திரில்லர் படமான ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Gal Gadot (@gal_gadot)