Richest Actors In India: இந்திய சினிமாவில் பணக்காரர்கள் யார்..? லிஸ்ட் இதோ..!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக ரூ.7,300 கோடியுடன் இடம் பிடித்தார்.
ஆகஸ்ட் 30, டெல்லி (New Delhi): ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் (Hurun India Rich List 2024) நேற்று (ஆகஸ்ட் 29) வெளியிடப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். ஒரு பாலிவுட் நடிகர், முதன்முறையாக கௌதம் அதானி (Gautam Adani) மற்றும் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) போன்றவர்களுடன் இணைந்துள்ளார். ஷாருக்கான் 7,300 கோடி ரூபாய் மதிப்பீட்டை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் உரிமையே அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதுதவிர, ஷாருக்கான் 47 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுடன் முக்கிய பிராண்ட் நிலைப்பாட்டை கொண்டுள்ளார். ஷாருக்கான் மட்டுமல்ல, ஜூஹி சாவ்லா (Juhi Chawla), அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) போன்றோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். Vishal on Sexual Harassments: உப்புமா கம்பெனிகளால் பாதிக்கப்படும் பெண்கள்; தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை: விஷால் போட்டுடைத்த உண்மை.. முழு விபரம் உள்ளே.!
ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலிவுட் நடிகர்கள்:
1. ஷாருக்கான் மற்றும் குடும்பம் - ரூ.7,300 கோடி
2. ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தினர் - ரூ.4,600 கோடி
3. ஹிருத்திக் ரோஷன் - ரூ 2,000 கோடி
4. அமிதாப் பச்சன் மற்றும் குடும்பம் - ரூ.1,600 கோடி
5. கரண் ஜோஹர் - ரூ 1,400 கோடி
இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜூஹி சாவ்லா ரூ.4,600 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். 2000 கோடி சொத்து மதிப்புடன் ஹிருத்திக் ரோஷன் மூன்றாவது இடத்திலும், அவரது ட்விட்டரில் அவருக்கு 32.3 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர். அமிதாப் பச்சன் நான்காவது இடத்திலும், கரண் ஜோஹர் (Karan Johar) 5-வது இடத்திலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஷாருக்கானுடன், ஏஞ்சல் முதலீட்டாளர் ஆனந்த் சந்திரசேகரன், ஜெப்டோ இணை நிறுவனர்கள் கைவல்யா வோஹ்ரா மற்றும் லென்ஸ்கார்ட் நேஹா பன்சால் இணை நிறுவனர் ஆதித் பாலிச்சா, ஜோஹோவின் ராதா வெம்பு ஆகியோரும் முதன்முறையாக ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். ஒட்டுமொத்த இந்திய பணக்காரர்கள் பட்டியலில், 11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கௌதம் அதானி முதலிடத்தில் இருக்கிறார், முகேஷ் அம்பானியை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)