Disney Layoff: இயக்குனர்கள், தயாரிப்பாளர் உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்தது வால்ட் டிஸ்னி நிறுவனம்; அதிரடி முடிவு.!
டாய் ஸ்டோரி, கோகோ போன்ற படங்களில் பாராட்டுகளை பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 04, நியூயார்க் (Cinema News): தனித்தனியே குழந்தைகளை கவரும் வகையிலான திரைப்படங்கள் மற்றும் தொடர்களை எடுத்து வெளியிட்டு வந்த டிஸ்னி மற்றும் வால்ட் நிறுவனங்கள், கடத்த 2006ல் டிஸ்னியின் முயற்சியால் ஒன்றிணைந்தது. டிஸ்னி வால்ட் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, கார்ட்டூன் முறையில் வெளியாகும் படங்கள் உலகளவில் விநியோகிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாப் இகேரி, டிஸ்னி நிறுவனம் படிப்படியாக 7 ஆயிரம் பேரை வேளையில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் புதிய பணியாளர்களை எடுத்து திறம்பட செயல்பட மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டுக்கு பின்னர் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டிஸ்னி நிறுவனம், தற்போது முக்கியமான பணியாளர்கள் உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு முதல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப குழுவினர் உட்பட பலரும் இடம்பெற்றுள்ளனர். Health Tips: அன்றாடம் சாப்பிடும் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் எவை?.. புள்ளி விபரத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.!
கடந்த 2022ல் டிஸ்னியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான லைட் இயர் திரைப்படம் 20 கோடி அமெரிக்கா டாலர் பட்ஜெட்டில் தயாராகி, 22 கோடி அமெரிக்கா டாலர் மட்டுமே சர்வதேச அளவையும் சேர்த்து வசூல் செய்தது. இதனால் படம் தோல்வியடைந்ததாக முடிவு செய்யப்பட்டு, அதன் பின்னரே பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
டாய் ஸ்டோரி, கோகோ போன்ற படங்களில் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் அங்கஸ் மக்லேன், தயாரிப்பாளர் கேலின் சுஸ்மான் ஆகியோரும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். சர்வதேச அளவிலான விளம்பரத்திற்கு உதவி செய்த பிக்சரின் துணை தலைவர் மைக்கேல் அகுள்நேக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.