Kamal Hassan an Anger Reply: நிக்சனின் பேச்சை தனது பாணியில் கண்டித்த கமல் ஹாசன்: ஆரவாரத்தில் ஆட்பறித்த ரசிகர்கள்.. வைரல் ப்ரோமோ உள்ளே.!

போட்டியாளர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த, மற்றொரு போட்டியாளரை எந்த நிலைக்கும் கொண்டு செல்வார்கள் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நடக்கின்றன.

BiggBoss S7 Tamil | 9 Dec 2023 Promo (Photo Credit: Facebook)

டிசம்பர் 09, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 07 வது சீஸனும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் வீட்டிற்குள் சென்ற 23 போட்டியாளர்களில், 11 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். முதல் முறையாக பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

எஞ்சியுள்ள போட்டியாளர்கள்: 11 போட்டியாளர்களிடையே பிக்பாஸ் நட்சத்திர விருதை பெற போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தினமும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சுவாரஷ்யமான போட்டிகள் மற்றும் சண்டைகளை மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து கண்டுகளித்து வருகின்றனர். வார இறுதியான தற்போது தொகுப்பாளர் கமல் ஹாசன் போட்டியாளர்களிடையே பேசுகிறார். Love Couple Married in Police Station: கர்ப்பமாக்கிவிட்டு கைவிட நினைத்த காதலனை, காவல் நிலையத்தில் கரம்பிடித்த இளம்பெண்.! 

இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் போட்டி: வீட்டில் எஞ்சியுள்ள அனன்யா, அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, பூர்ணிமா, ரவீனா, சுசித்ரா, சுரேஷ், விசித்ரா, விக்ரம், விஜய், விஷ்ணு ஆகியோர் தொடர்ந்து மக்கள் மத்தியில் இடம்பெற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவேசமான கமல்: இந்நிலையில், நிக்சன் போட்டியாளர்களை அவதூறான சில வார்த்தைகளால் ஆவேசத்தில் பேசிவிட, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கமல் ஹாசன் இன்று அவருக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Card Warning) வழங்கினார். இதுகுறித்த காணொளி வைரலாகி வருகிறது.