Leo Naa Ready Song: நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை; சர்ச்சையை சந்தித்த லியோவின் முதல் பாடல்.!

நான் ரெடி பாடல் வரிகள் அனைத்தும் கதைக்களத்திற்கேற்ப போதைப்பொருளை அத்தியாவசியப்பொருள் போல எழுதி பாடியிருந்தாலும், அது போதைப்பொருளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

Actor Vijay (Photo Credit: Twitter)

ஜூன் 26, சென்னை (Cinema News): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் இளைய தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், அர்ஜுன் தாஸ், ஜியார்ஜ் மரியான், கதிர், மிஸ்கின் உட்பட பலர் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. அனிரூத் ரவிச்சந்தர் இசையமைத்து இருக்கிறார், விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்றாக லியோ இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அன்று படத்தின் முதற்பார்வை, அதனைத்தொடர்ந்து நான் ரெடி பாடல் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. நான் ரெடி பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார் என்ற செய்தி அவரின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை அளித்தது.

இதற்கிடையில், நான் ரெடி பாடல் வரிகள் அனைத்தும் கதைக்களத்திற்கேற்ப போதைப்பொருளை அத்தியாவசியப்பொருள் போல எழுதி பாடியிருந்தாலும், அது போதைப்பொருளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என சுட்டி காண்பித்த சமூக ஆர்வலர்கள், காவல் நிலையத்தில் புகார்களும் அளித்துள்ளனர். World Competitiveness Rankings 2023: உலகளாவிய போட்டித்திறன் நாடுகளில் சிங்கப்பூர் பின்னடைவு; இந்தியா 3 நாடுகளை பின்தள்ளி முன்னேற்றம்..! முழு விபரம் உள்ளே..! 

Leo Naa Ready Lyric Video (Photo Credit: YouTube)

இந்த புகாரின் பேரில் தற்போது சென்னை காவல் துறையினர் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கொருக்குப்பேட்டை சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில், அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் விஜய் தனது ரசிகப்பெருமக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி இருந்தார். இதற்கிடையில் தான் அவர் சொந்த குரலில் பாடிய பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக லியோ படத்தின் முதற்பார்வை புகைப்படத்தில், அவரின் வாயில் சிகிரெட் இருந்ததால் அதற்கும் கண்டனம் எழுந்தது.

சமூக பொறுப்பு மிக்கவராக நடிகர் விஜய் நடந்துகொள்ள வேண்டும் என பலர் குரல் கொடுத்து வந்தாலும், கதைக்கேற்ப பாடலை எழுதிய பாடல் ஆசிரியர், அதனை மனதார ஏற்றுக்கொண்டு இசையமைத்த இசையமைப்பாளர், அனுமதித்த இயக்குனர் & தயாரிப்பாளர்கள் என பலரிடமும் அந்த பொறுப்பு இருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

வாழ்க்கையில் கஷ்டமும் இருக்கும், இன்பமான தருணங்களும் இருக்கும். எதை நாம் தேர்வு செய்து வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறோம் என்பதை பொறுத்தே மேற்படி எதிர்காலம் அமையும். அது திரை வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திரைமறைவில் வாழும் வாழ்க்கையாக இருந்தாலும் சரி என்பதை உணர்ந்து செயல்பட்டால் நலமே.