MIB Notice to Netflix: நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சம்மன்; கந்தகார் ஹைஜாக் தொடர் விவகாரத்தில் அதிரடி.!

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் பகிரப்பட்டு வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

Netflix Logo (Photo Credit: @Netflix X)

செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளம், சர்வதேச அளவில் 45 மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் நெட்பிளிக்ஸ் சேவை என்பது ஸ்மார்ட் டிவி வைத்துள்ளார் முதல், ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் வரை விரும்பி பார்க்கின்றனர். இதில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஸ்குயிட் கேம் தொடர், நெட்பிளிக்ஸை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.

பெயரை மாற்றியதால் சர்ச்சை:

அதனைத்தொடர்ந்து, இந்தியாவில் வெளியிடப்படும் பல்வேறு திரைப்படங்கள், நெடுந்தொடர்களையும் நெட்பிளிக்ஸ் வாங்கியது. சில தொடர்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இதனிடையே, சமீபத்தில் நெட்ப்ளிக்சில் ஐசி 814: தி காந்தகர் ஹைஜாக் (IC814: The Kandahar Hijack) எனப்படும் நெடுந்தொடர் வெளியானது. இந்த நெடுந்தொடரில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் பெயர்களில் போலா, சங்கர் என்ற ஒரு மதத்தினரின் பெயர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அனுபவ் சின்ஹா இத்தொடரை இயக்கி இருக்கிறார். Corona Virus: ஒரே வாரத்தில் திடீர் உச்சம்பெற்ற கொரோனா... 7 நாட்களுக்குள் 1000 பேர் மரணம்; அதிரவைக்கும் ரிப்போர்ட்.!

வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு:

இந்த விசயத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விஷயம் மாற்றுக்கருத்துக்களை பரப்பும் எனவும் குற்றசாட்டை முன்வைத்தனர். காந்தகர் ஹைஜாக் தொடர் குறித்த சர்ச்சை வாதங்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படவே, ஓடிடி மற்றும் பிற ஒளிபரப்பு விஷயங்களை கண்காணித்து வரும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு சம்மன் வழங்கி இருக்கிறது. இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சட்டரீதியான பதில் அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது.

மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்தின் கெடுபிடி:

ஓடிடி உட்பட சினிமா, தொலைக்காட்சி தவிர்த்து உள்ள தளங்களில் மிகப்பெரிய அளவிலான சர்ச்சை கருத்துக்கள் என்பது கருத்தியல் ரீதியாக எடுக்கப்படுகின்றன. இவை ஒருசில நேரம் பெரிய அளவிலான விவாதத்திற்கும் வித்திடுகின்றன என்பதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தனது ஒளிபரப்பு அமைச்சகத்தின் வாயிலாக சட்டங்களை கடுமையாக்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.