Chinmayi Sripaada: பாலியல் புகாருக்கு உள்ளாகியவருக்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்துவதா?; வைரமுத்து விவகாரத்தில் சீறிப்பாயும் சின்மயி.!
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக எவ்வித நேரடி, மறைமுக புகாரும் இன்றி கவிஞராக வாழ்ந்து வந்த வைரமுத்துவின் மீது #Me Too உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுந்த பரபரப்பு புகார்கள் தமிழகத்தையே அதிரவைத்தன.
ஜூலை 13, சென்னை (Cinema News): திரைப்பட பாடலாசிரியர் & கவிஞர் வைரமுத்துவின் 70 வது அகவை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், கவிஞர் வைரமுத்துவின் வீட்டிற்கே சென்று தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க ஸ்டாலின், "கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள்.
இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!" என கூறி இருந்தார். Anurag Thakur Lakakh: 14 ஆயிரம் அடியில் அடிகுழாயில் சுவையான குடிநீர்; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி.!
வைரமுத்துவின் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட பாடகி சின்மயி உட்பட பலரும் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து தமிழ் திரையுலகை அதிரவைத்தனர். இந்த புகார் இன்று வரை கிடப்பிலேயே இருக்கிறது.
இதனை மேற்கோளிட்டு காண்பித்துள்ள பாடகி சின்மயி, "பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய வைரமுத்துவின் பிறந்தநாளுக்கு முதல்வர் நேரில் சென்று வாழ்த்து கூறுவது எப்படிப்பட்டது?. 4 பெண்கள் புகார் தெரிவித்து, 2 பெண்கள் வெளிப்படையாக உண்மையை கூறிவிட்டோம்.
இன்று வரை அவரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவிலை. டெல்லியில் இதுபோன்ற குற்றசாட்டை முன்வைத்தே மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கும் அரசு எந்த விதமான விசாரணை முயற்சியையும் முன்னெடுக்கவில்லை" என தெரிவித்து இருக்கிறார்.