Chhatrapati Shivaji Maharaj: காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியின் நடிப்பில், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைத் திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
5 க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகவுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை திரைப்படத்தில், காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிப்ரவரி 19, மும்பை (Cinema News): ஹிந்தியில் அலிகார்க், பூமி, பிஎம் நரேந்திர மோடி உட்பட பல படங்களை தயாரித்து வழங்கிய தயாரிப்பாளர் சந்தீப் சிங் (Sandeep Singh), இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஸபீட் (Safed) படத்தின் வாயிலாக பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே, சந்தீப் சிங், காந்தாரா திரைப்பட புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி (Rishab Shetty)யுடன் இணைந்து சத்ரபதி சிவாஜி மஹராஜ் (Chatrapati Shivaji Maharaj) என்ற படத்தை தயாரித்து வழங்குகிறார். Suzhal 2 Official Trailer: கிரைம் தில்லரில் மிரளவைக்கும் காட்சிகள்.. ஓடிடியில் வெளியாகும் சுழல் 2 ட்ரைலர் இதோ.!
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி:
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், பார் போற்றும் அளவிலான மராட்டிய பேரரசை மிகப்பெரிய ஆற்றலுடன் கட்டியெழுப்பி, இன்றளவும் மராட்டிய மக்களால் பெருவாரியாக போற்றப்படும் மன்னர் என்ற இடத்தினை சத்ரபதி சிவாஜி கொண்டுள்ளார். இன்று அவரின் 395 வது ஜெயந்தி விழா சிறப்பிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவை 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தாலும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய தேசத்தில் பெரும்பங்கு நிலப்பரப்பை தனது ஆட்சியின் கீழ் சத்ரபதி சிவாஜி கொண்டு இருந்தார். சேர, சோழ, பாண்டிய தமிழ் மன்னர்களைப்போல, சத்ரபதி சிவாஜி மராட்டிய மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு தனது ஆட்சியை இந்தியாவெங்கும் நிறுவி இருந்தார்.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் திரைப்படம் (Chhatrapati Shivaji Maharaj Movie):
இந்நிலையில், தற்போது ரிஷப் ஷெட்டியின் நடிப்பில், சந்தீப் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் எடிட்டிங்கில், லெஜெண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் படம் உருவாகிறது. படம் 21 ஜனவரி 2027 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விறுவிறுப்புடன் படத்தின் படப்பிடிப்பு பணிகளை நடத்தி, படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹிந்தி மொழியில் உருவாகும் சத்ரபதி சிவாஜி மஹராஜ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என பல மொழியிலும் வெளியாகிறது.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் படத்தின் முதல்பார்வை (Chhatrapati Shivaji Maharaj FirstLook):
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)