
பிப்ரவரி 19, சென்னை (Cinema News): அமேசான் ப்ரைம் வீடியோ (Prime Video India Presents) இந்தியா தயாரித்து வழங்கும் சுழல் 2 (Suzhal – The Vortex Season 2) ஓடிடி தொடரை, பிரம்மா, சர்ஜுன் கேஎம் ஆகியோர் இயக்கி வழங்கி இருக்கின்றனர். இந்த நெடுந்தொடரில் நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh), லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி ஜி கிசான், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளேஸி, ரினி, ஸ்ரீஷா, அபிராமி பாஸ், நிகிதா சங்கர், அஸ்வினி நம்பியார், சாந்தினி தமிழரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். TV Actor Charith Balappa: ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்.. சீரியல் நடிகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!
சுழல் கதை சுருக்கம்:
மூத்த வழக்கறிஞர் செல்லப்பா என்பவரின் கொலை தொடர்பாக நடக்கும் விசாரணையும், அதனைச் சுற்றி அடக்கும் மர்மமும் என தொடங்கும் கதை, பல பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களின் செயலை சுட்டிக்காண்பிக்கிறது. இந்த கொலைக்கு பின்னணியில் இருக்கும் நபர்களை கண்டறியும் பணியில் இறங்கும் நாயகன் கதிர், மர்மத்தை விலக்கினரா? என்ன நடந்தது? என்பதை கிரைம் தில்லர் பாணியில் தயாரித்து ஓடிடி நெடுந்தொடராக வழங்கி இருக்கின்றனர்.
வெளியீடு தேதி அறிவிப்பு:
இந்த தொடரின் ஒளிப்பதிவு பணிகளை ஆப்ரஹாம் ஜோசப், இசையமைப்பு பணிகளை சாம் சிஎஸ், எடிட்டிங் பணிகளை ரிச்சர்ட் கெவின் ஏ மேற்கொண்டுள்ளனர். இந்த நெடுந்தொடர் 28 பிப்ரவரி 2025 முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. பல மொழிகளிலும் சுழல் தொடரை வெளியிடவும் தயாரிப்பு குழு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று சுழல் 2 ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அது உங்களின் பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது.