Prithviraj Sukumaran: படப்பிடிப்பில் படுகாயமடைந்த நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்; நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
விபத்தில் நடிகர் பிரித்விராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 27, திருவனந்தபுரம் (Cinema News): ஊர்வசி தியேட்டர்ஸ் தயாரிப்பில், ஜெயன் நம்பியார் இயக்கத்தில், நாயகனாக பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விளையாத் புத்தா (Vilayath Buddha).
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகர் பிரித்விராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் படக்குழுவால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். Deepawali Holiday: தீபஒளி நாளன்று அரசு விடுமுறை வழங்கி உத்தரவு; கொண்டாட்டத்தில் களைகட்டிய அமெரிக்க இந்தியர்கள்.!
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுகையிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், "விளையாத் புத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பில் எனக்கு விபத்து நடந்தது உண்மைதான். எதிர்பாராமல் அந்த விபத்து நடந்துவிட்டது.
நான் தற்போது நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வருகிறது. இன்னும் சில மாதங்கள் ஓய்வு தேவைப்படும் என நான் நினைக்கிறன். வலியுடன் போராடி மீண்டெழுவேன். உங்களின் பிரார்த்தனைக்கு நன்றிகள்" என தெரிவித்துள்ளார்.