Doctor Murder Case: நடுஇரவில் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல்.. மருத்துவர் சுட்டுக்கொன்ற பயங்கரம்..!
டெல்லியில் தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 03, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியின் தென்கிழக்கில் ஜெயித்பூரில் (Jaitpur) நிமா என்ற தனியார் மருத்துவமனை (Nima Hospital) செயல்பட்டு வருகின்றது. அங்கு நேற்று (அக்டோபர் 02) இரவு 2 பேர் நோயாளிகள் என கூறிக்கொண்டு, மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், மருந்து சீட்டு வாங்குவதாக கூறி அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவித் அக்தரை சந்திக்க உள்ளே சென்றுள்ளனர். School Staff Beats Student: மாணவரை சரமாரியாக தாக்கி, சுவரில் மோத வைத்து கொடுமை: வகுப்பறையில் ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
இதனையடுத்து, அவர்கள் இருவரும் டாக்டர் இருக்கும் அறைக்கு சென்றதும், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டாக்டரை சுட்டுக் கொன்றுவிட்டு (Murder) இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தினர். புறநோயாளிகள் என்ற பெயரில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் டாக்டரை சுட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிமா மருத்துவமனை வெளிப்புற காட்சி: