Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
கார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர்.
டிசம்பர், 10: பல்பொருட்களின் சந்தையாக இருக்கும் இந்தியா (India) உலகளவில் மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும் இருக்கிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பொருட்கள் பெருமளவு ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படுகிறது. இன்றளவில் கார்களின் (Cars) பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், எப்படியாவது ரூ.10 இலட்சத்திற்குள் நல்ல கார் ஒன்றை வாங்கிவிட வேண்டும் என பலரும் முயற்சித்து வருகிறார்கள்.
கார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர். தற்போது, இன்னும் சில வாரங்களில் புதுவருடமும் பிறக்கவுள்ளது. அதனால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள், அதற்கு அடுத்தபடியாக என பல கார்கள் சந்தைகளில் அறிமுகமாகவுள்ளன.
ஜீப் கிராண்ட் செரொகி (Jeep Grand Cherokee): 1995 CC திறனுடன் 8 ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் கொண்ட சொகுசு கார் ஜீப் கிராண்ட் விரைவில் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த காரின் விலை ரூ.80 இலட்சத்திற்குள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதற்கு பெட்ரோல் எரிபொருள் ஆகும்.
ஹூண்டாய் IONIQ 5 (Hyundai IONIQ 5): முழுவதும் பேட்டரியால் இயங்கும் ஹூண்டாய் IONIQ ரக கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.50 இலட்சம் இருக்கலாம். மேலும், இது முழுக்க முழுக்க பேட்டரி சக்தியுடன் இயங்குகிறது என்பதால் எஞ்சின் திறனை பொறுத்து அதன் பயண தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் போது அதன் மொத்த சிறப்பம்சங்களும் தெரிவிக்கப்படும். BitCoin Thief: 3.36 பில்லியன் டாலர் பிட்காயின்களை திருடிய ஆசாமி கைது.. டார்க் வெப்பில் செய்கை காண்பித்தவருக்கு 10 ஆண்டுகள் கழித்து ஆப்பு.!
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எஸ்.பி (Mercedes-Benz GLB): 1998 CC திறனுடன் ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் கொண்ட சொகுசு காராக இந்திய சந்தைகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எஸ்.பி அறிமுகமாகிறது. இது பெட்ரோலை எரிபொருளாக கொண்டது ஆகும். சந்தையில் விற்பனைக்கு ரூ.50 இலட்சம் மதிப்பில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. மெர்சிடிஸ் GSB ரக கார் 5 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை நெருங்கக்கூடிய சிறப்பம்சத்தில் சாலைகளில் ஓட தயார் செய்யப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ 2 சீரிஸ் (BMW 3 Series): 15 நவம்பருக்கு மேல் விரைவாக இந்திய சந்தைகளில் களமிறங்கவுள்ள BMW 3 சீரிஸ் ரூ.48 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. பெட்ரோலை எரிபொருளாக கொண்டு 1998 CC திறனுடன் ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டத்துடன் களமிறங்கும் BMW கார் பலராலும் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி ஹெக்டர் (MG Hector): விலை: Rs.18.00 இலட்சம்: டீசல் எஞ்சினுடன் 1956 CC திறன் கொண்டு மேனுவல் கியர் அமைப்புடன் களமிறங்கும் எம்.ஜி.ஹெக்டர் கார் ரூ.18 இலட்சத்திற்கு சந்தைகளில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
அதனைப்போல வோல்க்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) கார் ரூ.8.00 இலட்சம் விலையுடனும், போர்ட் மஸ்டாங் மாச்-இ (Ford Mustang Mach-E) கார் ரூ..70.00 இலட்சம் மதிப்புடனும், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) ரூ.20.00 இலட்சம் மதிப்புடனும், டொயோட்டா அர்பன் க்ரூசேர் (Toyota Urban Cruiser) ரூ.8.80 இலட்சம் மதிப்புடனும், மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ (Mercedes-Benz EQA) ரூ.60.00 இலட்சம் மதிப்புடனும் சந்தைகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் களமிறங்கவுள்ளது. இதன் விற்பனையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இது இன்ப செய்தியை வழங்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 04:30 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)