Republic Day Speech in Tamil: குடியரசு தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இதோ.!
தாய்திருநாட்டின் குடியரசு தினத்தை உங்களின் நாளாக சிறப்பிக்க, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்பு செய்தித்தொகுப்பு கட்டுரையை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்குகிறது.
ஜனவரி 23, சென்னை (Chennai News): இந்தியாவில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Constitution of India) நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதி இந்திய குடியரசு தினம் (Republic Day 2025) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 76 வது இந்திய குடியரசு தினம், இன்னும் 3 நாட்களில் பிரம்மாண்டமான கொண்டாடட்டதுடன், ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் சிறப்பிக்கப்படவுள்ளது. குறிப்பாக அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய அரசு நிர்வாக துறை ரீதியான அலுவலகத்தில் குடியரசு தினம் 2025 கொண்டாட்டம் களைகட்டும். பார்போற்றும் பாரதம் என்ற அடைமொழிக்கேற்ப, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை ராஜபாதையில், குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் (Republic Day Delhi Parade 2025) இந்திய பாதுகாப்பு படைகளான இராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில வாரியாக அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாநில அளவிலும், மாநில தலைநகர்களில், அந்தந்த மாநில ஆளுநர், முதல்வர்களுக்கும் மரியாதை அளிக்கப்படும். இந்த பதிவில், இந்திய குடியரசு தினத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுவோருக்காக சிறப்பு கட்டுரை தொகுப்பு மற்றும் குடியரசு தின பேச்சு போட்டிக்கான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வழங்கியுள்ள தகவலை பயன்படுத்தி நீங்கள் உங்களின் பள்ளி, அலுவலகத்தில் குடியரசு தின உரையை நிகழ்த்தலாம்.
குடியரசு தினம் 2025 பேச்சு போட்டி & கட்டுரை (Republic Day 2025 Speech):
ஆண்டில் எத்தனை நாட்கள் இருந்தாலும், நாம் பிறந்து வளர்ந்த தாய்திருநாட்டின் சிறப்பை போற்றும் விதமாக இருக்கும் தினங்களில் மிகமுக்கியமானது இந்திய குடியரசு தினம். ஒவ்வொரு ஆண்டும் இந்திய தாய்திருநாட்டின் குடியரசுதினம் 26 ஜனவரி அன்று சிறப்பிக்கப்படுகிறது. இங்கு குடியரசு என்றால் என்ன? என கேள்வி எழலாம். அதாவது, முன்னதாக நடைமுறையில் இருந்த மன்னராட்சியில், மன்னர் இறந்த பின்னர் அவரின் மகன் மன்னர், பின் அவரின் மகன், அதன்பின் என அது சங்கிலித்தொடராக குடும்ப பொறுப்பாளர்கள் மன்னர் பொறுப்பை பெற்றுக்கொள்வார்கள். மன்னராட்சிக்கு எதிராக, புரட்சியின் விளைவாக உண்டாகியதே குடி அரசு. மக்களுக்கான அரசை அமைப்பதே குடியரசின் முக்கிய நோக்கம் எனவும் கூறலாம். Republic Day 2025: 76-வது இந்திய சுதந்திர தினம்: ராஜ்பாத் கொண்டாட்டம், வாழ்த்துச்செய்தி.. விபரம் இதோ.!
குடியரசின் அளப்பரிய உன்னதத்தை உணர்ந்திருந்த அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன், "மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி" எனவும் தனது விளக்கத்தை வழங்கி, இன்று வரை நமது நினைவுகளில் இருக்கிறார். குடிமக்களுக்கான அரசு, அதன் சட்டங்கள், உரிமைகள், கடமைகள், நாட்டின் பாதுகாப்பு, எதிர்கால சிந்தனை, சமூக நீதி என அனைத்து சூழலிலும் மக்களுக்கான ஆட்சியை நிலைநாட்டுவதே மக்களாட்சியின் தார்மீக கொள்கை ஆகும்.
குடியரசு தினம் வரலாறு:
இந்தியாவில் சுதந்திர காற்று மக்களால் சுவாசிக்கப்பட்ட பின்னர், எதிர்கால இந்தியாவின் சீர்மிகு வளர்ச்சி, மக்களின் அங்கீகாரத்தை உறுதி செய்தல், அவர்களுக்கான நலப்பணிகளை எவ்வித தொய்வும் இன்றி நிலைநாட்ட டிசம்பர் 12, 1946 அன்று நிரந்தர அரசியல் அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. அந்த வரைவு குழுவை உருவாக்க, அண்ணல் பிஆர் அம்பேத்கர் தலைமையில் வரைவு குழு உருவாக்கப்பட்டு, அக்குழு நவம்பர் 04, 1947 அன்று அரசியலமைப்பு ஆவணத்தை சமர்ப்பித்து, 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சட்டத்தை எழுதி முடித்து, இறுதியாக ஜனவரி 24, 1950 அன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று, ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பு சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அன்றைய நாளே இந்தியாவின் குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது.
தியாகங்களால் வளர்ந்த இந்தியா:
சுதந்திர காற்றை சுவாசித்து இங்கு கூடியுள்ள அவையோர்களே, இந்திய சுதந்திரத்தின் சுதந்திர காற்றை நாம் இன்று எளிமையாக சுவாசித்து இருக்கலாம். நமது இயல்பு சுவாசத்திற்கு காரணம், அன்று அகிம்சையும்-தோட்டாவுமாக இருபெரும் துருவங்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களே. அண்ணல் காந்தியடிகள் அகிம்சை வழியிலும், சுபாஷ் சந்திர போஸ் அதிரடி வழியும் களமிறங்கி சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த இந்தியர்களும், தமிழர்களும் ஏராளம். அனைவரும் இந்தியாவுக்கே விடுதலை என்ற முழக்கத்தை தங்களின் உயிர்மூச்சாக நினைத்து போராடி, பலர் உயிர் மூச்சை இழக்கவும் செய்தனர். அன்று அவர்கள் செய்த தியாகமே இன்று நம்மை இங்கு தலைநிமிர்ந்து அமர வைத்துள்ளது. விடுதலைக்காக போராடிய ஒவ்வொரு நெஞ்சமும் தனக்காக இல்லாமல், தனது குடும்பத்துக்காக இல்லாமல், உருவாகுமா? இல்லையா? என்பது தெரியாத எதிர்கால தலைமுறையான நமக்கு மட்டுமே. அன்று அவர்கள் தியாகம் செய்யவில்லை என்றால், உலக நாடுகளில் இந்தியாவின் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். Republic Day Speech in Tamil: குடியரசு தின பேச்சுப் போட்டியில் கலந்துக் கொள்ள போறீங்களா? உங்களுக்கான கட்டுரை இதோ.!
உரிமை, கடமை:
இன்று கட்சி என்ற பாகுபாடை தாண்டி அந்த நாடு செல்லும் இந்திய பிரதமருக்கு வரவேற்பு, குடியரசு தலைவருக்கு வரவேற்பு, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வரவேற்பு என வல்லரசான அமெரிக்கா, ரஷியா நாடுகளில் தொடங்கி, மிகச் சிறிய நாடுகள் வரை நமது தேவையையையும், வருகையையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இவை அனைத்திற்கும் சுதந்திரம், குடியரசு ஆகியவற்றின் வாயிலாக கிடைத்த வெற்றியும், நமது ஒற்றுமையும் மட்டுமே காரணம். இந்திய சுதந்திரம் பலரின் வாழ்க்கையில் சுதந்திர காற்றை வழங்கியதுபோல, இந்திய குடியரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் அவர்களுக்கான உரிமை, திட்டம், கடமையை உணர்த்தி செயல்படுத்த வழிவகை செய்கிறது. பாரில் பல நாடுகள் இருந்தாலும், "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" என பாரதி கூறிய வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்காக ஒரு சிறிய கதை சொல்லி அதனுடன் முடிக்கிறேன்.
இந்தியராக பெருமை கொள்வோம்:
உலகம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, உயிர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உண்டானது, மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உண்டாகினர். நாம் வாழும் உலகில் இந்தியா என்ற ஒரு தேசத்தை கொலம்பஸின் தொடங்கி பலரும் தேடி அலைந்திருக்கின்றனர். இன்று நாம் உலகின் எந்த மூளைக்கு சென்றாலும், தொழில்நுட்பத்தின் உதவியால் பல விஷயங்களை எளிமையாக கற்றறிகிறோம். ஆனால், நினைத்துப்பாருங்கள்.. கேம்பஸ், படகு என சிறிய அளவிலான விஷயங்களை கொண்டு, இந்தியா என்ற ஒரு தேசத்தை உலகமே தேடி அலைந்திருகிறது. அதன் வாயிலாக பல நாடுகளும், நாகரீகங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா என்றாலும், இந்தியர் என்றாலும், உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே நாம் மிகப்பெரிய சக்தியுடன் இருந்துள்ளோம். அந்நிலையை நாம் மீண்டும் எட்டிப்பிடிக்க தொடர்ந்து இந்திய தேசத்திற்காக பணியாற்றுவோம். வெளிநாடுகளில் சென்று வேலை பார்த்தாலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிப்போம். இந்தியராக பிறந்து, இந்தியராக மறைவது நாம் பிறந்த தேசத்திற்கு நாம் செய்யும் பிரியாவிடை. ஜெய்ஹிந்த், வாழ்க இந்தியா, வளர்க தமிழ்நாடு.
இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)