Post Office Schemes: "வங்கியை விட அதிக பலன்" அஞ்சல் துறையில் அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

இந்திய அஞ்சல் துறையில் வங்கிகளை விட மேலான பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இவை பொதுமக்களுக்கு பல எதிர்கால உதவிகளையும் செய்கின்றன.

File Image: Post Office

டிசம்பர், 11: இந்திய அஞ்சல் (India Post) துறையில் வங்கிகளை விட மேலான பல சேமிப்பு திட்டங்கள் (Savings Scheme) இருக்கின்றன. இவை பொதுமக்களுக்கு பல எதிர்கால உதவிகளையும் செய்கின்றன. இவற்றில் உள்ள சேமிப்பு திட்டங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம். அஞ்சல் துறையில் வைக்கப்படும் வங்கிக்கணக்கு திட்டங்களில் சிலவற்றுக்கான வட்டி விகிதம் அரசின் பத்திரப்படி நிர்ணயம் செய்யப்படும். இவை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஆவது உண்டு.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (Savings Account) : வங்கிகளை போலவே தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்குகள் இருக்கின்றன. இவை தனிநபர் & ஜாயிண்ட் என 4 % வட்டி வழங்கக்கூடியது ஆகும். குறைந்தபட்சமாக ரூ.500 இருப்புத்தொகை கொண்டு Post Office கணக்கை தொடங்கிவிடலாம். தபால் கணக்கை உறுதி செய்ய காசோலை படிவம், ஏ.டி.எம் கார்டு போன்றவையும் வழங்கப்படும். Mobile Net banking வசதியும் உண்டு.

ஐந்தாண்டு தொடர் வைப்பு கணக்கு (5 Year Recurring Deposit Account-RD) : தபால் அலுவலகத்தில் தொடர் வைப்பு கணக்கு திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த கணக்கை தொடங்க குறைந்தபட்சம் மாதம் ரூ.10 முதல் அதிகபட்சமாக தங்களால் இயன்ற தொகையை செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்வு பெறுகிறது. Mobile Net Banking வசதி உண்டு.

நேர வைப்பு கணக்கு (Time Deposit Account-TD) : தபால் அலுவலகத்தில் நேர வைப்பு கணக்கு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மாற்றி வழங்கப்படும். அதன்படி முதல் 3 ஆண்டுகளுக்கு 5.5 % வட்டியும், நான்காம் ஆண்டுக்கு 6.7 % வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு வைத்துக்கொண்டால் பிரிவு 80C படி வரிவிலக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திலும் Mobile Net Banking வசதி உண்டு.

மாதாந்திர வருமான கணக்கு (Monthly Income Scheme Account-MIS): மாதாந்திர வருமான கணக்கு திட்டத்தின் கீழ் 6.6% வட்டி விதம் வழங்கபடுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.4.5 இலட்சம் முதலீடு செய்யலாம். ஜாயிண்ட் கணக்காக இருந்தால் ரூ.9 இலட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெறுகிறது. Night Shift Employees Health: நைட் ஷிப்டில் பணியாற்றி வருகிறார்களா?.. உங்களுக்கான உணவுமுறை என்ன?.. சுதாரித்து உடல்நலனை மேம்படுத்துங்கள்.! 

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme-SCSS) : மூத்த குடிகளுக்கான திட்டத்தில் 55 வயது முதல் 60 வயது நிரம்பிய மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை முதலீடு செய்துகொள்ளலாம். இதன்மூலம் வருமான வரிச்சட்டம் 80C படி வரிவிலக்கு அளிக்கப்படும். 5 ஆண்டுகளில் நிறைவு பெரும் இத்திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படும்.

பொது வருங்கால வைப்பு நிதி (15 year Public Provident Fund Account-PPF) : பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. இதில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 தொகை வரை முதலீடு செய்ய இயலும். 15 ஆண்டுகள் கழித்த பின்னரும் சேமிப்பு திட்டத்தை நீட்டிக்க விரும்பினால், 5 ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் (National Savings Certificates-NSC) : தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 6.8% வட்டி வழங்கபடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் எவ்வுளவு தொகையானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் 80C வரிவிலக்கு வழங்கப்படும்.

கிஷான் விகாஸ் திட்டம் (Kisan Vikas Patra-KVP) : கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6.9 % வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகை 124 ம் மாதத்தில் அல்லது 10 ஆண்டுகள் 4 மாதத்தில் இரட்டிப்பாக கையில் கிடைக்கும். இந்த திட்டத்தில் பெரியோர் சிறியோர் வயது வரம்பு கிடையாது, முதலீடு வரம்பும் இல்லை. ஆதலால் யார் வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம்.

சுகன்யா சம்ரிதி கணக்கு (Sukanya Samriddhi Accounts) : பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம் வேண்டும் என்ற கணக்கில் கொண்டு வரப்பட்டது செல்வ மகள் திட்டம் என்ற சுகன்யா சம்ரிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு கீழ் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 7.6 % வட்டி வழங்கபடுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 இலட்சம் முதலீடு செய்யலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 03:52 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement