Man Dies By Heart Attack: ஐயப்ப பக்தர் திடீரென மாரடைப்பால் மரணம்.. துடிதுடித்த நண்பர்கள்..!

ஆந்திர பிரதேசத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ayyappa Pakthar Dies By Heart Attack (Photo Credit: @ChotaNewsTelugu X)

நவம்பர் 25, துவாரகா திருமலை (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், அமலாபுரம் மண்டலம் இந்துப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர், ஐயப்ப மாலை அணிந்து துவாரகா திருமலைக்கு (Dwaraka Tirumala) தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார். அப்போது, வைகுந்தம் கியூ வளாகத்தை அடைந்ததும், சுரேஷ் மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். Road Accident: அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார்.. 2 பேரின் உயிரை பறித்த அதிவேகம்..!

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சுரேஷ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement