Fake IT Raid: தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ.18 இலட்சம் கொள்ளை: பணத்திற்கு ஆசைப்பட்டு சொந்த வீட்டில் கைவைத்த பேரன்.!

நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில், கூட்டமாக சேர்ந்து பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகளின் வீட்டில் சோதனை நடத்தி பணத்தை அப்பாவி பொதுமக்களுக்காக வழங்குவார்கள். அதுபோல, போலி வருமான வரித்துறை சோதனை மும்பையில் நடைபெற்றுள்ளது.

Cops Arrested Accuse Visuals (Photo Credit: @ANI X)

டிசம்பர் 06, மும்பை (Mumbai): மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சீயோன் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த குழுவினர், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி, வீட்டில் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்றனர். மேலும், வீட்டில் இருந்த ரூ. 18 லட்சம் பணத்தையும் கைப்பற்றி, வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

போலி வருமான வரித்துறை சோதனை: இதுதொடர்பாக தொழிலதிபர் விசாரிக்கும் போது, போலி கும்பலின் கைவரிசை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

மோசடிக்கு அடித்தளமிட்ட குடும்ப உறுப்பினர்: தீவிர விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் ராஜ்குமார் குஜர் என்ற நபரையும், அவரது மோசடி கும்பலையும் கைது செய்தனர். இவர்களில் ராஜ்குமார் குஜர் தொழிலதிபரின் பேரனுடைய நண்பர் ஆவார். தொழிலதிபரின் பேரன் பணத்திற்கு ஆசைப்பட்டு சொந்த வீட்டில் போலி வருமானவரித்துறை சோதனையை நடத்தி இருக்கிறார். Cough Syrups Failed Test: இருமல் மருந்துகளில் 128 தரமில்லாதவை என ஆய்வுகளில் நிரூபணம்: அதிர்ச்சியை தந்த முடிவுகள்.. டானிக் பிரியர்களே உஷார்.! 

பேரனின் பகீர் செயல்: குடும்பத்தினர் தங்களின் நிலத்தினை விற்பனை செய்து வீட்டில் ரூ.10 கோடி பணத்தை வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், அதனை அபகரிக்க திட்டமிட்ட பேரன், தனது நண்பர் அபய கசலேவுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். அவர் குஜராத்தை சேர்ந்த கும்பலுக்கு தொடர்புகொண்டு விபரத்தை தெரிவித்து, பணம் கிடைத்ததும் பங்கிட்டுக்கொள்ளலாம் என பேசி முடிக்கப்பட்டுள்ளது.

ரூ.18 இலட்சம் கொள்ளை: இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் அடையாள அட்டையுடன், அதிகாரிகள் தோரணையில் கும்பல் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.18 இலட்சம் சிக்கியுள்ளது. இந்த பணத்தை எடுத்துக்கொண்டு கும்பல் சென்றுவிட்டது.

அம்பலமான உண்மை: வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதற்கு அத்தாட்சியாக சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்த தொழிலதிபர், விசாரித்தபோதே நிலவரம் அம்பலமாகியுள்ளது. இதன்பின்னர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

8 பேர் கும்பல் கைது: புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கூறிய சம்பவம் வெட்டவெளிச்சமாகவே, தொழிலதிபரின் பேரன் உட்பட 8 பேர் கும்பல் அதிரடியாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now