Cough Syrup | CDSCO Logo (Photo Credit: Pexels / Wikipedia)

டிசம்பர் 05, புதுடெல்லி (New Delhi): இந்திய மக்கள் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்தும், மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்படும் தரக்கட்டுப்பாட்டு சோதனைக்கு பின்னரே பொதுவெளியில் பயன்படுத்த, சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்படும். கடந்த 2022 டிசம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 குழந்தைகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இருமல் சிரப் குடித்து நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வரை சென்ற இந்திய இருமல் மருந்துகளின் தரம்: அதனைப்போல, காம்பியா நாட்டை சேர்ந்த 60-க்கும் அதிகமான குழந்தைகள், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுத்தத்தின் இருமல் சிரப் குடித்து உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரங்கள் ஐ.நா வரை எடுத்து செல்லப்பட்டு, ஐ.நா-வும் மத்திய அரசுக்கு இருமல் மருந்து தொடர்பான பரிசோதனைக்கு அழுத்தம் தந்தது.

ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள்: இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தர கட்டுப்பாட்டு சோதனையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், சண்டிகர், குஜராத் உட்பட பல மாநிலங்களில் அமைந்துள்ள தரகட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 2014 மாதிரிகளில், 128 மாதிரிகள் தரமானது இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. School Teachers Vacancy: ஆசிரியர்களுக்கான 8.4 இலட்சம் காலிப்பணியிடங்கள்: மாநில வாரியாக ரிப்போர்ட் கொடுத்த மத்திய கல்வி அமைச்சகம்.. அதிர்ச்சி விபரங்கள் இதோ.! 

Syrup Cough (Photo Credit: Pexels)

போலி இருமல் மருந்துகள் / தரமில்லாத மருந்துகள்: பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் இவை ஆறு விழுக்காடு என்பதால் மருத்துவ பணியாளர்களிடையேயும், சாமானியர்களையும் இது பெரும் அதிர்ச்சியூட்டும் தகவலாக அமைந்துள்ளது. மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஆய்வகங்கள் & மருந்து ஆணையம் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, தமிழ் நாட்டில் உள்ள சென்னை, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சண்டிகர், அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஆகிய நகர்களில் இருக்கின்றன.

6% தரமில்லாதவை: இவற்றில் குஜராத் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எடுத்துக் கொள்ளப்பட்ட 385 மாதிரிகளில் 51 மாதிரிகள் தோல்வி அடைந்துள்ளன. அதேபோல, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆய்வகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 52 மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 29 மாதிரிகள் தரம் இல்லாத மருந்துகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. Jigarthanda 2 Japan Movie OTT Release Date: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் படங்கள் ஓடிடி வெளியீடு: தேதியை அறிவித்தது நெட்பிளிக்ஸ்.!

தரமில்லாத மருந்துகளை தயாரித்த நிறுவனங்களுக்கு தண்டனை என்ன?: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என வயது வித்தியாசமின்றி இருமல், காய்ச்சலுக்கு சிரப்களை நம்பி இருந்த பலரும் இந்த செய்தியால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் பல தரமற்ற மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுகாதாரத்துறையின் வாயிலாக தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதிக்கு முன்பு சோதனை: மத்திய வர்த்தக அமைச்சகம் மே மாதம் இருமல் மற்றும் அது சார்ந்த மருந்து உற்பத்தியாளர்களின் ஏற்றுமதிக்கு முன்பு, அரசு ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விஷயத்தை கட்டாயப்படுத்தி இருந்தது. மேலும், உள்நாட்டிலும் & வெளிநாட்டிலும் இருமல் சிரப் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்பட்ட மரணம் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மத்திய அரசு இது தொடர்பான ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.