Teenager Argument With Hotel Management: கெட்டுப்போன பார்சல் உணவு; ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!
உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் வாங்கிய உணவு கெட்டுப்போனதை அடுத்து, வாலிபர் ஒருவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜூலை 31, வாரணாசி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ராம்கடோரா என்ற இடத்தில் உள்ள பிரபல உணவகம் (Restaurant) ஒன்று உள்ளது. அங்கு இளைஞர் ஒருவர் பப்ஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளார். அவை கெட்டுப்போனதை அறிந்த அவர், ஹோட்டல் நிர்வாகத்திடம் ஒவ்வொன்றாக எடுத்து திறந்து காண்பித்து முறையிட்டுள்ளார். மேலும், ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது. Minor Girl Behaved Like A Snake: குகையில் பாம்பு போல் நடந்துகொண்ட சிறுமி.. வீடியோ வைரல்..!
பொதுவாக உணவகங்களில், துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து, இயற்கையான காய்கறிகளை கொண்ட சத்தான உணவுகளை உட்கொள்வது சிறந்ததாகும். துரித உணவுகள் (Fast Food) உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும். எனவே, துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.