KarnatakaAssemblyElection2023: "வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்" - தேர்தலில் வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்.!
224 தொகுதிகளுக்கும் கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பதால், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன.
மே 10, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும், மே 10ம் தேதியான இன்று காலை 7 மணியளவில் 2023 சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை 7 மணி முதலாகவே வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.
அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக பல வியூகங்கள் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள பிரச்சாரம் மேற்கொண்டது. தாங்கள் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் ஒருபுறமும், ஜனதா தளம் (எஸ்) மற்றொருபுறமும் என தேர்தலை எதிர்கொள்வதால், அங்கு மும்முனை போட்டி என்பது இருக்கிறது. இதனால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Imran Khan: பதற்றத்தில் கொந்தளிக்கும் பாகிஸ்தான்; திரைப்பட பாணியில் கண்ணாடி ஜன்னல் உடைய கைது செய்யப்பட்ட இம்ரான்..! காரணம் தெரியுமா?.!
நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் 119 இடங்களில் வெற்றி பெரும் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என்பதால் தேர்தல் முடிவுகள் நாளை எதிர்நோக்கி மக்களும், அரசியல் கட்சியினரும் இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்த தேர்தல் முடிவுகளில் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலையிலேயே பெங்களூரில் உள்ள ஷாந்தி நகர் St. ஜோசப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்தல் வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்த நடிகர் பிரகாஷ்ராஜ், தனது வாக்குகளை பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடையே பேசிய அவர், "வகுப்புவாத அரசியலுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும். கர்நாடகம் அழகாக மாற வேண்டும்" என பேசினார்.