Bigg Boss Tamil Season 9: விக்கல்ஸ் விக்ரம், அகோரி கலையரசன் முதல் வாட்டர் மெலன் ஸ்டார் வரை.. களைகட்டும் பிக் பாஸ் சீசன் 9.. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரம்.!
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) கோலாகலமாக இன்று (05 அக். 2025) முதல் (Bigg Boss Tamil Grand Launch) தொடங்கியுள்ளது. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரத்தையும் (Bigg Boss Tamil Season 9 Contestants Full List) இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
அக்டோபர் 05, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி 8 சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இன்று தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பதிவில் பிக் பாஸ் வீடு (Bigg Boss Home) மற்றும் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரத்தையும் (Bigg Boss Tamil Contestants Full List Tamil) காணலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீடு (Bigg Boss Tamil Season 9 Home):
முந்தைய சீசன்களை போல இல்லாமல், எகிப்திய அரண்மனை தோற்றம், பழைய காலத்துக்கும், நடப்பு காலத்துக்கமான தொடர்பை அடிப்படையாக கொண்டு வீடு உருவாக்கப்பட்டுள்ளது. லிவிங் ரூம், சமையல் அறை மாற்றங்கள் புதிய அனுப்புவதை கொடுப்பதை போல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டில் முதல் நாளே தண்ணீர் பிரச்சனை ஆரம்பிவித்துவிட்டது என்பதால், போட்டி ஒவ்வொரு நாளும் சுவாரஷ்யமான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்கள் விபரம் பின்வருமாறு இணைக்கப்படுகிறது. முந்தைய போட்டிகளை போல இல்லாமல் 2கே இளைஞர்கள், அவர்களை கவரும் போட்டியாளர்கள் என இளம் தலைமுறையை கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
1. டாக்டர் T. திவாகர் (Watermelon Star Diwagar Bigg Boss Tamil): மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகேயுள்ள கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், கடின உழைப்பு, நேர்மை அடையாளம். தவறை சுற்றிக்காட்டி, எதிர்த்து போராடும் குணம் கொண்டவராக இருந்துள்ளார். படிப்பு, கலைநிகழ்ச்சியில் பங்கேற்பு என ஆர்வமாக இருந்தவர், மருத்துவம் பயின்றுவிட்டு தனியார் மருத்துவமனையில் வேலை செய்துள்ளார். பின் கிளினிக் நடத்தி வீடியோ வெளியிட தொடங்கியவர், 2019ல் வாட்டர்மெலன் ஸ்டார் என அறியப்பட்டுள்ளார். நடிப்பு திறமையை மெருகேற்ற, பிசியோதெரபி மருத்துவமனை கட்டுவதற்கு, தவறாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவாகர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.
2. மாடல் ஆரோரா சிங்க்லெர் (Aurora Sinclair Bigg Boss Tamil): பேஷன், மாடலிங் துறையில் விருப்பம் இல்லை என்றாலும், வேலை செய்யும்போது பழக்கமானது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் மாடலிங் துறைக்கு வந்தேன். நட்பு பலரிடம் இருந்தாலும், மனம் விட்டு பேசும் ஒருவர் தான் மனதில் இருக்கிறார். பள்ளிப்பருவத்தில் பிக் பாஸை கவனித்தனர், இன்று வீட்டுக்குள் சென்றுள்ளார்.
3. எப்ஜெ FJ (FJ Bigg Boss Tamil): சுதந்திர கலைஞர், ஆர்வத்துடன் இருக்கும் துடிப்பான பையன். போட்டோகிராபி, வீடியோ கிராபி ஆர்வத்துடன் சினிமா கனவு உண்டு. அதனை வரிகளில் சொல்லலாம் என தமிழுடன் கலந்து ரேப் பாடல் பாடுகிறார். ஹிப்ஹாப் தமிழா இவரது திறமையை உயர்த்தியவர். வாழ்க்கையில் கற்றுக்கொண்டு நடிப்பில் முன்னேற வாய்ப்பு தேடி வந்தவருக்கு, பிக் பாஸ் கிடைத்துள்ளது. பிறரைப்போல ராப் பாடி வெற்றியை நோக்கி பயணிக்கவிருக்கிறார். சமையலும் கற்றுக்கொண்டுள்ளார். பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது இவரின் ஆசை.
4. விஜே பார்வதி (VJ Parvathy Bigg Boss Tamil): வீரம் நிறைந்த மதுரை மண்ணில் பிறந்தவர். மதுரை பேச்சு எப்போதும் அடையாளம். வீட்டில் கடைக்குட்டி பெண் என்பதால், அட்ராசிட்டி இவரின் அடையாளம். குடும்பத்தில் பலரும் வழக்கறிஞர். வீட்டில் உள்ளவர்கள், அம்மா உலகம் என வளர்ந்தவருக்கு அம்மாவின் உறுதுணை வாழ்க்கையில் வெற்றிபடிக்கட்டு காரணம். படித்தது ஊடகத்துறை. அதிலேயே தொகுப்பாளர் பணியில் பலரால் அறியப்பட்டார். சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களை கண்காணித்து கருது கேட்க ஆரம்பித்தார். அடுத்தது என்ன? என பார்க்கும்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரைப்பற்றி மக்கள் புரிய வாய்ப்புகள் கிடைக்கும். கனவு பெரியது, பார்வை புதிது, கண்ணோட்டம் வேறு.
5. துஷார் (Tushaar Bigg Boss Tamil): TN 55 தமிழ் பையன். ஆனால், தோற்றத்தை பார்த்து பலரும் எந்த நாடு என கேட்பார்கள். புதுக்கோட்டை பையன் தான் துஷார் ராஜேந்திரன் (Tusshar Rajendran). அரட்டை பொழுதுபோக்கு. நடிகராகுவது கனவு. சிம்பு பிடிக்கும். சிவகார்த்திகேயன் கொள்கை பிடிப்பாளர். மாடலிங் துறையிலும் ஆர்வம் இருக்கிறது. 2020க்கு பின் வீடியோ போட்டு, தற்போது பிக் பாஸ் வந்துள்ளார்.
6. கனி திரு (Kani Thiru Bigg Boss Tamil): வாழ்க்கை தெரியாமல், பயத்துடன் இருக்கும் பெண். வாழ்க்கையை வேற மாதிரி எழுதி கட்டலாம் என்பதில் நம்பிக்கை உள்ள பெண். நம்பிக்கை எப்போதும் முக்கியம். கனியிருப்ப காய்கவர்ந்தாற்றது என்பதைப்போல, யூகம் சிறியது, அது பெரியது. காரக்குழம்பு கனி என்பது குக்வித் கோமாளி கொடுத்த ஆச்சரியம். என்னை நான் சொல்லவும், மக்கள் புரிந்துகொள்ளவும் பிக் பாஸ் உதவும். பிக் பாஸ் உலகம் கொடுக்கும் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
7. சபரிநாதன் (Sabarinathan Bigg Boss Tamil): வேலன், ரோஹித், சாரதி என சீரியல் கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மை பெயர் சபரிநாதன். சேலத்தை சொந்த ஊராக கொண்டவர். இவரின் அப்பா ஆசிரியர். அக்காவின் தியாகத்தில் உருவானார், ஐடி வேலைக்கு சென்று மீடியாவுக்கு வந்தார். வாழ்க்கையின் தொடக்கத்தில் பல அடிகள் விழுந்தன. கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி போன்ற பல வாய்ப்புகள் கிடைத்து தவறிப்போயின. வேலைக்காரன் சீரியல் முக்கியமானது. சபரியாக மக்களிடம் அடையாளம் பெற விரும்புகிறார்.
8. பிரவீன் காந்தி, இயக்குனர் (Director Pravin Gandhi Bigg Boss Tamil): ரட்சகன் பட இயக்குனர். சிறிய வயதிலேயே பெரிய வாய்ப்புகள், 23 வயதில் ரட்சகன் படம் என்று கொடிகட்டி பறந்தவர். உடன் இருந்தவர்களின் கேடான எண்ணத்தை புரிந்துகொள்ள முடியாமல் விழுந்தவர், தனது அனுபவத்தை பலரிடம் எடுத்துரைக்கும் விதமாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். நம்பிக்கையை விடக்கூடாது என்பதை சொல்ல உறுதியாக இருக்கிறார்.
9. கெமி (Kemi Bigg Boss Tamil): சென்னை பெண். நேர்மறையான எண்ணம் கொண்டவர், தன்னுடன் இருப்பவர்களையும் அப்படியே இருக்க வைப்பார். சிறுவயதில் நிறைய கஷ்டம். அதனை வெளிக்கொணர்ந்து சாதனைக்கு காரணமாக அமைந்தது பேஸ்கட் பால் விளையாட்டு. இந்தியா அணிக்காக விளையாடி விருதும் பெற்றுள்ளார். வலக்கையில் பல ஏற்ற-இரக்கம் இருந்தாலும், பிடித்த விளையாட்டில் அரசியல், பாகுபாடு காரணமாக கைவிட்டு வெளியேறியவர். விஜய் டிவியில் பார்வையாளர், போட்டியாளர் என தற்போது இங்கு வந்துள்ளார். அவரின் விளையாட்டு திறனை நிரூபிக்க பிக் பாஸ் வந்துள்ளார்.
10. ஆதிரை (Aadhirai Bigg Boss Tamil): திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். புதிதாக பழக காலம் ஆகும் என்றாலும், பழகிவிட்டால் எதுவாக இருந்தாலும் உதவலாம் என்ற குணம் கொண்டவர். குடும்பத்தினருக்கு சினிமா பிடிக்கும். அவர்களை பார்த்து நடிக்க ஆசை வந்தாலும், அனுமதி கிடைக்கவில்லை. 8 ஆண்டுகள் குடும்பத்தை பிரிந்து தவம் கிடந்தவருக்கு பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் கொரோனா அனைத்தையும் புரட்டிப்போட்டது. இப்பொது பிக் பாஸ்-க்கு வந்துள்ளார். Snapchat Memories: ஸ்டோரேஜ் சேவைக்கு கட்டணம்.. ஸ்னாப்சாட் பயனர்களுக்கு ஷாக்.!
11. ரம்யா ஜோ (Ramya Joo Bigg Boss Tamil): சொந்த ஊர் மைசூர், வளர்ந்தது பெங்களூர், இருப்பது தஞ்சாவூர். அப்பா அம்மா காதல் திருமணம் பின் பிரிந்து விட்டார்கள். அவரவர் வாழ்க்கையைப் பார்த்து பிரிந்து விட்டார்கள் என்பதால், அக்கா, தங்கையுடன் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். 2019 க்கு பின் மீடியாவில் நுழைந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்துள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். தொடர் முயற்சியில் வாழ்க்கையின் ஓட்டத்துடன் பயணிக்கிறார். குடும்பத்துடன் வாழ ஆசைப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.
12. கானா வினோத் (Gana Vinoth Bigg Boss Tamil): வடசென்னை பையன் வினோத் குமார். கானா வினோத் என்று கூறினால் பலருக்கும் தெரியும். ராயபுரத்தில் கூட்டுக்குடும்பம் இவர். இசைகுடும்பம் பின்னணி இவர். ஏளனமாக பலரால் பார்க்கப்பட்ட கானா, இவருக்கு சினிமா வெளிச்சத்தை காட்டியுள்ளது. மக்களுக்கான குரலாக இருப்பார்.
13. வியானா (Viyana Bigg Boss Tamil): விழுப்புரம் திண்டிவனத்தை பூர்வீகமாக கொண்டவர் சென்னையில் படித்துள்ளார். ஏர் ஹோஸ்டர்ஸ் பணிக்குப்பின், சினிமா ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சினிமா ஆர்வத்தில் மாடலிங் செய்தவருக்கு முதலில் வீட்டில் எதிர்ப்பு கிளம்பினாலும், அம்மாவின் ஆதரவுடன் சாதனையை தொடருகிறார். இவரின் வாழ்க்கையில் ஏற்ற-இரக்கம் இருந்தது.
14. பிரவீன் ராஜ்தேவ் (Praveen Raj Dev Bigg Boss Tamil): கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் தமிழன் இவர். தற்போது சென்னைவாசி. முன்னேற்றத்தில் இருக்கும் குடும்பம். பல கல்லூரி நிகழ்ச்சிகளில் நடித்து வெற்றிபெற்றவர், விளையாட்டில் சுட்டி. காவல்துறை வேலைக்கான வாய்ப்பு கிடைத்தாலும், நடிப்பால் காத்திருந்தார். இவரது பக்கபலம் நண்பர்களின் உதவி. ஈரமான ரோஜாவே, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியலில் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தியவர், வாழ்க்கையின் அடுத்தகட்டம் நோக்கி பயணிக்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.
15. சுபிக்சா (Subiksha Kumar Bigg Boss Tamil): தூத்துக்குடி பெண். சினிமா இவருக்கு பிடிக்கும். சிறுவயதுக்கு பின் கல்லூரி முடிந்ததும் முயற்சியெடுத்து வருகிறார். அப்பாவிடம் கடலுக்கு வருகிறேன் என்று அடம் பிடித்து சென்றார். மீனவ பெண்களில் அவரது ஊரில் மீன்பிடிக்கச் சென்ற முதல் பெண்ணாக தங்கை சுபிக்சா இருக்கிறார். மீனவர்களின் கஷ்டங்கள், வாழ்க்கை முறையை சமூக வலைத்தளத்தில் சொல்ல வேண்டும் என நினைத்தவர், அப்பாவின் முயற்சியால் முன்னேறி வருகிறார். அப்பா வாங்கிய வட்டி கடனை அடைத்து வருகிறார். மீனவர்களின் அடையாளமாக இவர் இருப்பார்.
16. அப்சரா (Apsara CJ Bigg Boss Tamil): கன்னியாகுமரி மாவட்டம் களியகாவிளையை சேர்ந்தவர். மாடலிங் 7 ஆண்டுகள் அனுபவம் உண்டு. வாழ்க்கையில் அதிக போராட்டம் இருந்தது. திருநங்கையாக இவரை வீட்டில் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். திருநங்கையாக சாதனை புரிய அதிக கஷ்டம் இருந்தாலும், அம்மாவின் ஆதரவுடன் படிப்பில் முன்னேறினார். மாடலிங், மிஸ் இன்டர்நெஷ்னல் போன்ற பல சாதனைகளுக்கு குடும்பம் உறுதுணையாக இருந்தது.
17. நந்தினி (Nandhini R Bigg Boss Tamil): கோவையில் பிறந்து வளர்ந்த பெண். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர். அப்பா, அம்மாவின் மறைவுக்குப்பின் ஏராளமான கஷ்டம். அப்பாவின் மறைவுக்குப்பின் அம்மா கவனித்துக்கொண்டார். இவருக்கு உறுதியாக இருந்தது யோகா. உடற்பயிற்சி, யோகா இவரின் கண்கள். பல விஷயங்களை அதன் வாயிலாக கற்றுக்கொண்டுள்ளார். தொகுப்பாளராக இருப்பது இவரின் கனவு. வாழ்க்கையில் முன்னேற ஒரு படியாக பிக் பாஸை தேர்வு செய்துள்ளார்.
18. விக்கல்ஸ் விக்ரம் (Vikkals Vikram Bigg Boss Tamil): சோசியல் மீடியா தெரியாத பெற்றோருக்கு இவரின் மீது நம்பிக்கை. நகைச்சுவை தான் எங்களின் அடையாளம். எங்களின் ஸ்டுடியோ மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது. பிக் பாஸ் வீடு என்ன தரப்போகிறது என்பதை அங்கு சென்றே பார்த்துவிடலாம் என பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார்.
19. கம்ருதீன் (Kamrudhin Bigg Boss Tamil): சென்னையை சேர்ந்தவர். துருதுவென இருக்கும் நபர். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்தவர். சினிமாவில் நடிகராக வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார். குடும்ப சூழலுக்குக்காக ஐடி வேலை பார்த்தார். நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்தாலும், பணத்தை விட வாழ்க்கையின் இலக்கு முக்கியம் என தோன்றியது. ஒரு வாரத்தில் வேலையை விட்டுவிட்டு வாய்ப்பு தேடி அடைந்தார். வெப்சீரிஸில் நுழைந்தவர், விஜய் டிவிக்கு வந்தார். பொருளாதார ரீதியாக சிக்கலை சந்தித்தவர், அம்மாவை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டபோது அவரையும் இழந்தார்.
20. அகோரி கலையரசன் (Agori Kalaiarasan Bigg Boss Tamil): தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். சிறுவயதில் அம்மா, அப்பாவை பிரிந்தவர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தார். 7 வயதில் இருந்து அருள்வாக்கு சொல்லுவார். நாட்டுப்புற கலைகளையும் கற்றுக்கொண்டு மக்களிடம் பிரபலமானார். தொழில் நஷ்டம், விபத்து என அடுத்தடுத்து கஷ்டத்தால் மனநிம்மதிக்காக காசி சென்றார். பின் கோவிலுக்கு வந்து அருள்வாக்கு சொன்னபோது கஷ்டம் தொடங்கியது. என்னைப்போல எனது பிள்ளைகளும் அப்பா அம்மா இல்லாமல் வளரக்கூடாது என்பதால், தவறுகளை திருத்திக்கொண்டு மனைவி குடும்பத்துடன் வாழ்கிறார். அகோரி கலையரசன் என்ற பெயரை மாற்றி பிக் பாஸ் கலையரசன் ஆக மாற்ற ஆசைப்பட்டு வந்துள்ளார்.
பாஸ் வீடு (Bigg Boss Home Tour Video):
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)