Violation Of Advertising Rules: எம்.எஸ் தோனி உட்பட முக்கிய பிரபலங்கள் மீது பரபரப்பு புகார்; காரணம் தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஒரு பொருளை விற்பனை செய்பவர், தனது பொருளை முன்னிறுத்த பல்வேறு காரணங்களை கூறி அதனை விற்பனை செய்வார். ஆனால், அவர் கூறியவை பொருட்களின் தரத்துடன் நிர்ணயித்து சோதனை செய்கையில் இல்லாத பட்சத்தில் அவர் சட்டப்படி குற்றம் இழந்தவர் ஆவார்.
மே 18, மும்பை (Mumbai): இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் விளம்பரத்திற்கு (Advertisement) வசனங்கள் என்பது கடுமையான தாக்கத்தை மக்களின் மனதில் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அவை திரும்ப திரும்ப ஒளிபரப்பட்டு மக்களால் விரும்பி வாங்கப்படும் அளவு நேர்த்தியான வார்த்தை மாய ஜாலத்துடன் பொருட்கள் விளம்பரப்படுத்தப்படும்.
இவ்வாறான விளம்பரங்கள் நேர்மையான மற்றும் உண்மையான தகவலை (Advertisement Rules) கூறாத பட்சத்தில், அல்லது விளம்பரத்தில் நடிப்பவர் அந்த விளம்பரத்தின் உண்மை தன்மையை அறியாமல், சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு இயக்குனரின் வார்த்தைகளை அப்படியே பிரதிபலிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் வரும் சட்ட சிக்கலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். Sundar Pichai Smartphone: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?.. விபரம் உள்ளே., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
இந்த நிலையில், இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் (Advertising Standards Council of India) எம்.எஸ் தோனி (MS Dhoni), நகைசுவை யூடியூபர் புவன் பம் ஆகியோர் விளம்பர தரநிலையை பின்பற்றவில்லை என்று கூறியுள்ளது. விளம்பர தரநிலை பின்பற்றாதவர்களின் பட்டியலில் எம்.எஸ் தோனி முதல் இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக புவனும் இருக்கின்றனர்.
இவர்கள் நடித்த விளம்பரத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவை குறித்த தரவுகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கடந்த ஆண்டில் 55 விளம்பரங்கள் மீது புகார் எழுந்த நிலையில், தற்போது அவை 503 விளம்பரமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், பிரபலங்கள் தோன்றி வரும் விளம்பரத்தில் கவனத்தை ஈர்க்க வழிவகை உண்டு.
ஆனால், அந்த விளம்பரங்களில் கூறப்படும் வார்த்தைகள் மற்றும் பொருளின் தரம் போன்றவற்றை கூறும்போது அவை தெளிவாக இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் விளம்பர நிறுவனங்கள் தோற்றுள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறான விளம்பரத்தில் தோனி 10 விதிமுறைகளுக்கு இணங்காத விளம்பரத்தோடு முதல் இடத்தில் இருக்கிறார். புவன் 7 விளம்பரத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ASCI விதிகளின்படி விளையாட்டு, கல்வி, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு விஷயங்களில் உள்ள விளம்பரத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். அவற்றை பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் கூடாது. 2023ம் ஆண்டில் தற்போது வரை 8,951 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 7,928 விளம்பரங்கள் விதியை மீறியது கருதப்படுகிறது. இவை ஆன்லைனில் உலா வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)