CAT Result 2024: கேட் தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு; விபரம் உள்ளே.!
கேட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
டிசம்பர் 20, கொல்கத்தா (Kolkata News): கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனமான ஐஎம்எம் கேட் சார்பில் (IMM CAT 2024) நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் iimcat.ac.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேட் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள விரும்பும் மாணாக்கர்கள், தங்களின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம். Fire Accident: பலசரக்குக் கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. பொருட்கள் எரிந்து நாசம்..!
முதல் இடத்தை பெற்ற மஹாராஷ்டிரா:
இந்த தேர்வில் சுமார் 14 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் முதல் மூன்று இடத்தையும் தக்க வைத்துள்ளனர். ஐஐஎம் மற்றும் 86 ஐஎம்எம் அல்லாத கல்வி நிறுவனங்களும் கேட் 2024 மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் என்பதால், கேட் 2024 தேர்வு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
4 பெண்களும் சாதனை:
அதேபோல 29 மாணவர்கள் 99.99 சதவீத மதிப்பெண்ணையும், 30 மாணவர்கள் 99.98 சதவீத மதிப்பெண்ணையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சுமார் முதல் 69 மாணவர்களில் 4 பேர் பெண்களும் ஆவார்கள். பொறியியல் மாணவர்கள் 59 பேர், கேட் தேர்வில் முதலிடமும் பெற்றுள்ளனர். பிற 15 வேட்பாளர்கள் பொறியியல் துறை சாராதவர்கள் ஆவார்கள்.