டிசம்பர் 19, இடுக்கி (Kerala News): கேரள மாநிலம், இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள தங்கமணி பகுதியைச் சேர்ந்தவர் ஜோய். இவர், அப்பகுதியில் பலசரக்குக்கடை நடத்தி வருகிறார். இவரது பலசரக்குக்கடையில் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 19) அதிகாலை 5.30 மணியளவில், 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து (Cylinder Explosion) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. Minor Girl Sexual Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தர்மஅடி.. பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டம்..!
சிலிண்டர் வெடித்து விபத்து:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகள் ஈடுபட்டனர். தீயை உடனே அணைக்க முயன்றதால் அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த பலசரக்கு கடையில் 12க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.