GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.!

"செத்தப்பயலே நாரப்பயலே" என்ற வசனத்துடன் தொடங்கி தன்னை கண்டிப்போரை தனது பாணியில் குணமாக திட்டி மக்களிடையே பிரபலமானவர் ஜி.பி. முத்து.

GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.!
File Image: Tic Tok Famous Man GP Muthu

டிசம்பர், 11: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் (Udangudi, Thoothukudi) பிறந்து, ஆரம்பகால வாழ்க்கையில் பல துயரங்களை கடந்து, பள்ளிப்படிப்பை துறந்து செல்போனின் பயன்பாட்டினால் டிக் டாக் செயலுக்கு அறிமுகமானவர் ஜி.பி முத்து (TicTok GP Muthu). அதன் மூலமாக "செத்தப்பயலே நாரப்பயலே" என்ற வசனத்துடன் தன்னை கண்டிப்போரை தனது பாணியில் குணமாக திட்டி மக்களிடையே பிரபலமானார்.

இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பல கஷ்டங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் படிப்படியாக சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டு வைரலாகிய ஜி.பி முத்து, திரைப்படம் ஒன்றில் நடிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால், அவர் எந்த படத்தில் யாருடன்? நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டும் மர்மமாக இருந்து வந்தது.

GP Muthu

படக்குழுவின் அறிவிப்புக்கு பின்னர் ஜி.பி முத்து சன்னி லியோனின் படத்தில் நடித்து வருவது உறுதியானது. யுவன் இயக்கத்தில், நடிகை சன்னி லியோ, சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜி.பி முத்து உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் OMG. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Dec Month: டிசம்பரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி பங்களாதேஷில் பலப்பரீட்சசை..! 

படத்தின் விளம்பரத்திற்காக OMG குழுவினர் பலரும் சென்னைக்கு வருகைதந்த நிலையில், ஜி.பி முத்து மற்றும் சன்னி லியோன் ஆகியோரும் வந்திருந்தனர். அந்த விழாவில் ரசிகர்களால் ஆரவாரமாக பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், சன்னி லியோன் தனக்கு ஜி.பி முத்துவை பிடிக்கும். அவர் அழகாக இருக்கிறார் என்று கூறி இருவரும் பால்கோவாக்களை ஊட்டிவிட்டு பரிமாறிக்கொண்டனர்.

Sunny Leone - GP Muthu

சன்னி லியோனை தெரியாத நபர்களே இருக்க முடியாது என்ற கருத்துகள் பேச்சுவழக்கில் மேலோங்கி இருந்த காலத்திலும், ஜி.பி முத்து சன்னி லியோன் யார் என்றே தெரியாமல் இருந்து அவருடன் நடித்து வந்துள்ளார். அவரது சமூக வலைதளபக்கத்தில் சன்னி லியோன் என்ற பெயரை பலரும் பலமுறை குறிப்பிட்ட பின்னரே அவர் யார் என தன்னுடன் இருப்பவர்களிடம் விசாரித்து இருக்கிறார்.

வெள்ளந்தி எண்ணம் கொண்ட ஜி.பி முத்து அவர் உடுத்தும் வெண்மை ஆடையை மனமாக கொண்டுள்ளார். கிராமத்தில் பிறந்து கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்த நாயகன், எதிர்காலத்தில் எப்படிவேண்டும் என்றாலும் உருப்பெறலாம் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக ஜி.பி முத்து அமைந்துள்ளார் என்பதே நிதர்சன உண்மை. நம்ம ஊர் வட்டார மொழிகளில் கூறியதை போல அவர் ஓவர் நைட்டில் உலக பேமஸாகிவிட்டார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 01:44 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement