Cop Died Farmers Protest: விவசாயிகள் போராட்டத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மரணம்; சோகத்தில் அதிகாரிகள்.!
இது சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
பிப்ரவரி 17, அம்பலா (Haryana News): பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பலரும், வேளாண் பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்தல், கடந்த வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குதல் உட்பட பல அம்ச கோரிக்கையை முன்வைத்து தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக (Farmers Protest 2024) முன்னேறி வருகின்றனர். போராட்டக்குழு டெல்லியில் நுழையாமல் எல்லைப்பகுதியில் தடுத்து வைக்க டெல்லி காவல்துறை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அம்மாநிலத்தில் காவல் துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
காவல்துறை தீவிர பாதுகாப்பு: காவல் துறையினரின் தடைகளை தகர்த்து, தொடர்ந்து டெல்லி நகருக்குள் நுழையும் வகையில் விவசாயிகளும் முயன்று வருகின்றனர். பல இடங்களில் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை களைத்து வருகின்றனர், டிரோனும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள ஷம்பு எல்லையில் (Shambhu Border) பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. HC On Controlling True Love: சிறார் பருவ காதலின் அன்பை சட்டத்தால் கட்டுப்படுத்த இயலாது: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.!
காவல் உதவி ஆய்வாளர் மரணம்: இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர் (Sub Inspector Dies) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அம்பலா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் ஹிரா லால் (வயது 52), நேற்று பணியில் இருக்கும்போது திடீரென உடல்நலக்குறைவை எதிர்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அதிகாரிகள், அம்பாலாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
காவல்துறைக்கு பேரிழப்பு: காவல் உதவி ஆய்வாளரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஹரியானா டிஜிபி ஷத்ருஜித் கபூர், "காவல் உதவி ஆய்வாளர் ஹிராலால் தனது வேலையில் எப்போதும் பயபக்தியுடன் செயல்படுவார். அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு" என கூறினார். காவலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும். அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.