Aadhar Pan Link: பேன் கார்டுடன் ஆதாரை இணைப்பது இவ்வுளவு சுலபமா??... 5 நிமிடத்தில் வீட்டிலிருந்தே வேலையை முடியுங்கள்.!

தனிநபரின் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் கார்டுடன் பேன் கார்டினை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Respective: Pan Aadhar Link (Picture Credits: PTI)

டிசம்பர், 9: தனிநபரின் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் கார்டுடன் (Aadhar Card) பேன் கார்டினை (Pan Card) இணைக்க வேண்டும் என மத்திய அரசு (Central Govt) அறிவித்துள்ளது. வங்கிக்கணக்கு பரிவர்தனைகளுக்கு பேன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதால், அதனுடன் ஆதாரையும் இணைக்க உத்தரவிடப்பட்டது.

ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு பின்னர் பேன் கார்டுக்கான படிவங்களும் மாற்றம் செய்யப்பட்டு, பேன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதே ஆதார் விபரங்கள் பெறப்பட்டு வந்தன. ஆனால், அதற்கு முன்னதாக பேன் கார்டு பெற்றவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால், அதற்கான ஆணையை அரசு அறிவித்தது. Slim Weightless Mobile: அடேங்கப்பா.. ஸ்மார்ட்போனில் எடை குறைந்த போன்கள் இவ்வுளவு உள்ளதா?.. வச்சிருக்குறதே தெரியாதுங்க.! லிஸ்ட் இதோ.! 

Aadhar Card

வீட்டில் இருந்தபடி ஆதார் - பேன் கார்டை இணைக்கலாம். அது இயலாத பட்சத்தில் அரசின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களில் சென்று அதற்கான கட்டணம் செலுத்திய விண்ணப்பிக்கலாம். இன்று வீட்டில் இருந்தவாறு ஆதார் - பேன் நம்பர் இணைப்பு தொடர்பான தகவலை தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையத்திற்கு சென்று, Link ஆதார் என்ற பக்கத்தை கிளீக் செய்ய வேண்டும். பின்னர் அதில் கேட்கும் ஆதார் மற்றும் பேன் கார்டு விபரங்களை தெரிவித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் பேன் - ஆதார் இணைப்புக்கான செயல்பாடுகள் தொடங்கிவிடும். இறுதியில் அதற்கான சேவை கட்டத்தினை செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

Note: இணையத்தில் விண்ணப்பிக்கும் போது நாம் ஒருமுறை Login செய்துவிட்டால் அது 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆகையால், 15 நிமிடங்களுக்குள் நாம் விரைந்து பதிவு செய்ய வேண்டும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 04:06 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).