Snake Found on Passenger Train: வாலை காட்டி ஆட்டிய பாம்பு; நடுநடுங்கிப்போன பயணிகள்.. இரயில் பயணத்தில் நடந்த சம்பவம்.!
அவர்களின் வார்தைப்போருக்கு பின் அதிகாரிகள் மாற்று பெட்டியை பொருத்தி இரயிலை இயக்கிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூலை 11, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் நகரில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பாந்த்ரா இரயில் நிலையம் வரை, வாராந்திர சிறப்பு இரயிலாக கோரக்பூர் - பாந்திரா (Gorakhpur-Bandra Terminus Weekly Express) சிறப்பு இரயில் (15067) இயக்கப்படுகிறது. நேற்று இந்த இரயில் கோரக்பூரில் இருந்து புறப்பட்டு, மதியம் 02:20 மணியளவில் லக்னோவில் உள்ள சர்பாக் இரயில் நிலையம் வந்தது.
மறைந்துகொண்ட பாம்பு:
அப்போது, இரயிலின் பி3 பெட்டியில் உள்ள ஜன்னல் துவார வழியில் இருந்து பாம்பு (Snake Found On Train) ஒன்று தனது வாலை நீட்டி இருக்கிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், விஷயம் குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இரயில் அங்கேயே கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டு பாம்பு உள்ளதா? என சோதிக்கப்பட்டது. பாம்பு அதற்குள் சுதாரித்து மறைந்துகொண்டதால் அதனை கண்டறிய இயலவில்லை. தொடர்ந்து அப்படியே இரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டு, இரயில் அடுத்த நிலையம் நோக்கி புறப்பட்டது. Woman was Attacked With an Axe: நிலத்தகராறில் மூத்த சகோதரி மீது கோடாரியால் கொடூரமாக தாக்குதல்; வாலிபர் கைது.. வீடியோ வைரல்..!
கான்பூர் இரயில் நிலையம் வந்த இரயில்:
இரயிலில் பாம்புடன் பதைபதைப்பு பயணம் மேற்கொண்ட பயணிகள், பாம்பு வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வுடன் தொடர்ந்து பயணம் செய்தனர். இரயில்வே அதிகாரி துளைகள் தென்பட்ட இடங்கள் அனைத்தையும் மூடினாலும், பயணிகளின் பயம் நீங்கவில்லை. இந்த நிகழ்வை பி3 பெட்டியில் பயணம் செய்த பிட்டு குமார் என்ற பயணி தனது செல்போனிலும் படமெடுத்து வைத்த நிலையில், மாலை 05:21 மணியளவில் இரயில் கான்பூர் வந்தடைந்தது.
பயணிகளின் வாக்குவாதத்திற்கு பின் பெட்டி மாற்றம்:
இதனையடுத்து, இரயிலை மேற்படி இயக்கவிடாமல் தடுத்த பயணிகள், தங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். பலகட்ட விவாதம், பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரயில் பெட்டியை மாற்ற நிர்வாகம் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பி3 பெட்டியானது இரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக காலியாக இருந்த ஏசி3 எக்கனாமி (A3 Economy) பெட்டி இணைக்கப்பட்டு இரயில் தனது பயணத்தை தொடங்கியது. இதனால் அந்த இரயில் 4 மணிநேரம் தாமதமாக தனது இலக்கை சென்றடைந்தது. இரயில் பெட்டி மாற்றம் செய்யப்பட்ட பின்னரே பயணிகளும் நிம்மதியாக பயணத்தை தொடங்கினர்.
பாம்பின் வால் தென்பட்ட வீடியோ உங்களின் பார்வைக்கு: