Jamtara Train Accident: தீப்பிடித்த ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க முயற்சி: ரயில் மோதியதில் 12 பயணிகள் பரிதாப பலி..!
விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க அவசர கதியில் தண்டவாளத்தில் குதித்தவர்கள் வேறொரு இரயில் மோதி பலியாகினார்.
பிப்ரவரி 28, ஜம்தாரா (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா மாவட்டம், காலஜகரியா (Kalajharia railway station) ரயில் நிலையத்தில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்படவே, பாதிக்கப்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் அலறியபடி கீழே இறங்கி தங்களது உயிரை தற்காத்துக் கொள்ள முயற்சித்தனர்.
12 பேர் உயிரிழப்பு: அச்சமயம் இவர்கள் பதற்றத்தில் மற்றொரு தண்டவாளத்தில் இறங்கி இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களின் மீது அவ்வழியாக வந்த.ரயில் ஒன்று மோதியது. ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர.
விசாரணை நடத்த உத்தரவு: இது குறித்து உயர்மட்ட விசாரணையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
#WATCH | Jharkhand: Rescue operations are underway at Kalajharia railway station in Jamtara after a train ran over several passengers. https://t.co/kVDqS0PetF pic.twitter.com/ItEVsMhzAJ
— ANI (@ANI) February 28, 2024
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)