Bangalore Businessman Dies: கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் மூச்சுத்திணறி பலி; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்.. பகீர் வீடியோ.!

இந்த விபத்தில் தொழிலதிபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Businessman Pradeep Dies After Car Caught Fire (Photo Credit: @path2shah X)

நவம்பர் 17, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சி பிரதீப் (வயது 42). இவர் ஹோட்டல் ஆலோசகராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இதனிடையே, நேற்று அவர் தனது காரில் முட்டினப்பால்யா பகுதிக்குச் சென்று, மரங்களுக்கு நடுவே காரை நிறுத்தி இருக்கிறார். சிறிது நேரத்தில் காரில் இருந்து கரும்புகை வெளியேறி, கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. Viral Video: சைபர் கிரைம் போலீசுக்கு போன் செய்து மாட்டிக் கொண்ட டம்மி போலீஸ்.. வீடியோ வைரல்..! 

மூச்சுத்திணறி பலி:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். மேலும், நிகழ்விடத்தில் இருந்தவர்களில் சிலர், காரின் கண்ணாடியை உடைத்து, புகையை அணைக்கும் கருவியை எடுத்து தீயை அணைத்து உள்ளே இருந்தவரை மீட்டனர். அப்போது, அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதி செய்ய்யப்ட்டது.

காவல்துறை விசாரணை:

தகவலை அறிந்த காவல்துறையினரும் நிகழ்விடத்திற்கு விரைந்த நிலையில், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கும் காவல்துறையினர், அவர் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? எனவும் ஆய்வு செய்கின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

தொழிலதிபரின் கார் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்: