நவம்பர் 16, திருவனந்தபுரம் (Kerala News): இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையதளத்தை பயன்படுத்தாத ஆளே கிடையாது. நாளுக்கு நாள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் வழக்குகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு மெசேஜ் கொடுத்து இருந்தார். அதில், மக்கள் யாரும் மோசடி கும்பலிடம் சிக்கிவிட கூடாது. டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) செய்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். PM Modi on Jhansi Fire Accident: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி., மாநில அரசும் இழப்பீடு அறிவிப்பு.!
இந்நிலையில், போலீசாக வேடமிட்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி ஆசாமி ஒருவர், யார் என்று தெரியாமல், கேரளா, திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் (Thrissur Cyber Crime Police) அதிகாரிக்கு வீடியோ கால் செய்து, டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போவதாக கூறி மிரத்தல் விடுத்துள்ளார். உடனே, தன்னுடன் பேசுபவர் போலி போலீஸ் என்பதை புரிந்து கொண்ட சைபர் கிரைம் அதிகாரி, நீ பேசிக் கொண்டிருப்பது திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் பிரிவுடன் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, அந்த மோசடி ஆசாமியிடம் உன்னுடைய லொகேஷன், உன்னுடைய அட்ரஸ் எல்லாம் எங்களிடம் மாட்டிக்கொண்டு விட்டது என்று தெரிவித்துள்ளார். உடனே அந்த மோசடி ஆசாமி பயந்து நடுங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோ இதோ:
View this post on Instagram