Wayanad Landslides: மரண ஓலங்களில் அலறும் வயநாடு; நிலச்சரிவு பலி எண்ணிக்கை 247 ஆக உயர்வு.. தொடரும் மீட்புப்பணி.!
2019 மழை வெள்ளத்திற்கு பின்னர், 2024ல் கேரளா மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 01, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் (Wayanad), சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை உட்பட 4 மலைக்கிராமங்கள் முழுவதுமாக மண்ணில் புதையுண்டன. தொடர்ந்து 4 நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த தென்மேற்குப்பருவமழையின் தீவிரம் காரணமாக, மண்ணில் தளர்ச்சி ஏற்பட்டு நிலம் சரிந்து பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என 13 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தபோதிலும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்றவை ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு நகரங்கள் விரிவாகிய நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரும் சோகம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது மீட்புப்பணிகளில் முப்படைகளும் ஈடுபட்டு வருகின்றனர். 16-Year-Old Gamer Jumps To Death: தீராத ஆன்லைன் கேம் மோகம்.. 14வது மாடியில் இருந்து கீழே குதித்த சிறுவன்.. துடிக்கும் பெற்றோர்கள்..!
கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை:
மழை-வெள்ளம், நிலச்சரிவு காரணமாக தற்போது வரை 247 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் சடலமும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. பல சடலங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கின்றன. தற்போது வரை 200 பேரின் விபரங்கள் குறித்த எந்த தகவலும் இல்லாததால், அவர்களும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் உடல்கள் நீருடன் அடித்து வரப்பட்டு மல்லபுரம் சாலியாற்றிலும் மீட்கப்பட்டு இருக்கிறது. வயநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள தேயிலைத்தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தேனியை சேர்ந்த குடும்பத்தினர் 9 பேர் பலியானது உறுதியான நிலையில், எஞ்சியோரின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதற்காக 2 ஐஏஎஸ் தலைமையிலான அதிகாரிகளும் வயநாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.