20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!

காதல் முறிவு தொடர்பான விவகாரத்தில், காதலியை இளைஞர் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 27, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டம், ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞரும், அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது ஷிவானியும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் இருந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக ஷிவானி அந்த உறவை முடித்து, வேறு நபருடன் 2025 மே மாதத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தாய் வீட்டிற்கு வந்திருந்த ஷிவானியை, இரவு நேரத்தில் தீபக் சந்தித்ததாக தெரியவருகிறது. அப்போது, காதலை முறித்ததற்கான காரணம் குறித்து இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.! 

உயிரிழந்த ஷிவானி:

வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், தீபக் தன்னுடன் கொண்டு வந்த அரிவாளை எடுத்து ஷிவானியை பலமுறை தாக்கி இருக்கிறார். இதனால் அதிக ரத்தம் இழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட ஷிவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலை நேரத்தில் அவர் அறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை கைது:

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை அதிகாரிகள் ஷிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷிவானியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், தீபக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னாள் காதலனின் பகீர் செயல் அம்பலமானது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement