Father Kills Daughter: மாற்றுத்திறன் மகளை கொன்று, தந்தை தூக்கிட்டு தற்கொலை.. வேலையின்மை விரக்தியால் சோகம்.!
தான் தற்கொலை செய்துவிட்டால் மாற்றுத்திறன் கொண்ட மகளை கவனிக்க ஆள் இல்லையே என்று நினைத்த தந்தை, மகளை கொன்று தானும் தற்கொலை செய்த சோகம் ஆக்ராவில் நடந்துள்ளது.
டிசம்பர் 01, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra Father Kills D) மாவட்டம், எட்மடுலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சந்திர பிரகாஷ் (வயது 46). இவர் ஷூ தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தை இருந்தனர். தற்போது, சந்திர பிரகாஷ், தனது 16 வயதுடைய மாற்றுத்திறன் மகளான குஷியுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இரண்டாவது திருமணம்:
இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக வேலையின்மை காரணமாக சந்திர பிரகாஷ் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கிறார். மகளும் மாற்றுத்திறன் கொண்டவர் என்பதால், மகளை அவர் அன்புடன் கவனித்து வந்துள்ளார். கடந்த 2022 ம் ஆண்டு சந்திர பிரகாஷின் மனைவி உயிரிழந்துவிடவே, இளவயது கொண்ட மகளை கவனிக்க, டெல்லியை சேர்ந்த சீமா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். Road Accident: கார் - லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
வேலை இழப்பால் நிதிச்சுமை:
திருமணத்திற்கு பின்னர் சந்திர பிரகாஷ் - சீமா தம்பதி, பிரகாஷின் முதல் குழந்தையான குஷியுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, சந்திர பிரகாஷுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக, அவரால் வேறு வேலையும் தேடிக்கொள்ள முடியவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக குடும்பம் பல கஷ்டங்களை அடைந்துள்ளது.
தற்கொலை எண்ணம்:
ஒருகட்டத்தில் சந்திர பிரகாஷ் தற்கொலை குறித்த முடிவெடுத்த நிலையில், தனது மரணத்திற்கு பின்னர் குழந்தையை உரிய முறையில் கவனிக்க ஆட்கள் இருக்காது என ஐயப்பட்டுள்ளார். மேலும், இரண்டாவது மனைவி நல்லபடியாக பார்த்துக்கொள்வார் எனினும், பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு மகளை கொன்று நாம் தற்கொலை செய்துகொள்வோம் என விபரீத முடிவுக்கு சென்றுள்ளார். Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.!
விஷம் கொடுத்து மகள் கொலை:
தனது திட்டப்படி அவர் சம்பவத்தன்று மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் சந்திர பிரகாஷ் விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். சீமாவும் அப்போது வீட்டில் இல்லை. தாயின் வீட்டிற்கு சென்றிருந்த சீமாவுக்கு வீடியோ கால் தொடர்புகொண்ட சந்திர மோகன், வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் நாளை தாய் வீட்டில் இருந்து வருவதாக கூறிய நிலையில், பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னரே இத்துயரம் நடந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை:
கணவருக்கு பலமுறை தொடர்புகொண்டும் எடுக்காததால், இரவு 10 மணிக்கு மேல் சந்திர மோகனின் சகோதரருக்கு தொடர்புகொண்டு வீட்டிற்கு செல்ல சீமா அறிவுறுத்தியுள்ளார். அப்போதுதான் இந்த துயரம் நடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், சந்திரமோகன், அவரின் மகள் குஷி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.