Panipuri Vendor Killed: இலவசமாக வழங்க மறுத்ததால் ஆத்திரம்; பானிபூரி விற்பனையாளர் அடித்தே கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
வீட்டிற்கு திரும்பிய விற்பனையாளர் மீது கொலை வெறித்தாக்குதலை நடத்திய கும்பலால், வீட்டிற்கு சென்று உயிரைவிட்ட நபரின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜனவரி 16, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், முசாநகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்சந்த் நிஷாந்த் (வயது 40). இவரின் மனைவி சசி தேவி. தம்பதிகளுக்கு அனுஜ் என்ற மகனும், மான்சி, பிரயன்சி, திவ்யன்ஷி என மூன்று மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அங்குள்ள சபிபூர் பகுதியில், கைலாஷ் சந்திரா என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். பிரேம்சந்த் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பணிகளை முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அச்சமயம் சபிப்பூர் பகுதியில் நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள், பிரேம்சந்தை நிறுத்தி இலவசமாக பானி பூரி கேட்டிருக்கின்றனர்.
இலவசமாக பானிபூரி கொடுக்காததால் பயங்கரம்: பிரேம்சந்த் அதனை கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த இளைஞர்கள் குழு அவரை கடுமையாக தாக்கி இருக்கிறது. அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு இளைஞர்களை கண்டித்து இருக்கின்றனர். உடலில் உட்காயத்துடன் வீட்டிற்கு திரும்பிய பிரேம்சந்த், தனது மனைவியிடம் விவரத்தை கூறிவிட்டு உறங்குவதாக தெரிவித்துள்ளர். Pongal Celebration: இன்று தை 2ம் நாள்: மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?.. விபரம் இதோ.!
காவல்துறையினர் விசாரணை: அவருக்கு திடீரென கடுமையான உடல் பிரச்சினை ஏற்பட்டு அவதிப்பட்டவே, ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது. அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், திங்கட்கிழமை சசிதேவி அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தபாங் என்பவரும், அவரது நண்பர்களும் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.