Donald Trump Statue: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்.. இந்தியாவில் சிலை வைத்து கொண்டாட்டம்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் சிலைக்கு இந்தியாவில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Donald Trump Statue (Photo Credit: @ANI X)

நவம்பர் 07, ஜங்கான் (Telangana News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (US Presidential Election 2024) வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (நவம்பர் 05) அமெரிக்காவில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து, இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிட்டார். PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி:

அதன்படி, நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாளான நேற்றைய தினம் (நவம்பர் 06) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை, அக்கட்சியின் தொண்டர்கள் விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனா்.

டொனால்ட் டிரம்ப் சிலைக்கு மரியாதை:

இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலம், ஜங்கான் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் 6 அடி சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை நிறுவிய புஸ்ஸா கிருஷ்ணா என்பவர் கடந்த 2020-ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின், இந்தியாவில் உள்ள சிலைக்கு அவரது ரசிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

டொனால்ட் டிரம்ப் சிலை: