Yellow Alert: தமிழ்நாட்டுக்கு மிககனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

கேரளா, தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூர், மிசோரம் உட்பட பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Yellow Alert in Tamilnadu (Photo Credit: @Dineshj00244888 X)

ஆகஸ்ட் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் தென்மேற்கு பருவமழையானது வலுப்பெற்று இருக்கிறது. இதனால் கேரளாவில் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. உத்தரகாண்ட், ஹிமாச்சல், அசாம் போன்ற மாநிலங்களில் திடீர் மேகவெடிப்பு மழையும் பெய்கின்றன. இதனிடையே, அடுத்த சில நாட்களும் தமிழ்நாட்டில் (TN Weather Update) மழையை எதிர்பார்க்கலாம் என்ற சாதக சூழ்நிலை நிலவி வந்தது. இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் தனது வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு நாளை மறுநாள் முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிககனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது. TN Govt Bus: சுதந்திர தினம், வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.! 

இந்திய வானிலை (Indian Meteorological Center) ஆய்வு மையம் அறிவிப்பு:

இதனால் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகளும் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. நாளை மறுநாள் முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தால், வரும் நாட்களில் மழை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியிலும் கனமழைக்கான எச்சரிக்கை:

அதேவேளையில், கேரளா மாநிலத்தில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களில் மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிக்கிம், மணிப்பூர், மிசோரம், ஹிமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகளும், தலைநகர் டெல்லியில் நாளை கனமழைக்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிககனமழைக்கு வாய்ப்புள்ள இடங்களில் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.