ஆகஸ்ட் 13, சென்னை (Chennai): 78வது இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று சிறப்பிக்கப்படுகிறது. வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் சுதந்திர தினதையடுத்து, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என வார இறுதி விடுமுறை (Weekend Holidays) நாட்கள் வந்துள்ளன. இதனால் சென்னை, கோவை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருப்போர் சொந்த ஊர் சென்று வர முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, பயணிகளின் வருகையை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் அன்று இயக்கப்படவுள்ளன.
கிளாம்பாக்கத்தில் (Kilambakkam Bus Stand) இருந்து 800+ பேருந்துகள் இயக்கம்:
அந்த வகையில், ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி அன்று சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆகஸ்ட் 16 அன்று கூடுதலாக 365 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கும்பகோணம், நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய பெருநகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. Tasmac: குடிமகன்களுக்கு ஷாக் செய்தி; டாஸ்மாக் கடைகள் செயல்படாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கோயம்பேட்டில் (Koyambedu Bus Stand) இருந்தும் சிறப்பு பேருந்துகள்:
அதேபோல, சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகின்றன. 16 மற்றும் 17 தேதிகளில் மேற்கூறிய நகரங்களுக்கு தலா 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகளை மண்டல வாரியாக இயக்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியிடம் திரும்பவும் நடவடிக்கை:
சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் மீண்டும் பணியிடம் திரும்புவதற்கு எதுவாக, மண்டல வாரியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகளை இயக்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் சொந்த ஊர் செல்லவும், பின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணியிடங்களுக்கு திரும்பவும் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்ய விரும்புவோர் tnstc.in என்ற இணையத்திற்கு சென்று பதிவு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. டிஎன்எஸ்டிசி-க்கு என பிரத்தியேக மொபைல் செயலிலும் இருக்கிறது.