Republic Day Marching by Women: தலைநகரில் உச்சம்பெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்: பெண் சிங்கங்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு.. கண்கவர் காட்சிகள் இதோ.!
இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக குடியரசு தினத்தன்று வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவின் படைகள் அணிவகுப்பை கண்டுகளித்தார்.
ஜனவரி 26, புதுடெல்லி (New Delhi): 75வது இந்திய சுதந்திர தினம், இன்று இந்தியாவில் வெகுமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. காலை முதலாகவே மாநில அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் தலைமையில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டு இருந்தார்.
பெண்கள் தலைமையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள்: நேற்று அவர் ஜெய்ப்பூர் வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சென்று வரவேற்றார். இருவரும் ஜெய்ப்பூர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இன்று டெல்லியில் குடியரசுதின நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். நடப்பு ஆண்டு குடியரசு நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெண்கள் இந்தியாவில் உள்ள இராணுவம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் தலைமையில் டெல்லியில் அணிவகுப்புகள் நடைபெற்றன.
ரஷிய தூதரகத்தில் குடியரசுதினம்: டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்தில், இந்திய குடியரசு தினம் சிறப்பிக்கப்பட்ட காட்சிகள்: இந்தியாவும் - ரஷியாவும் நீண்ட நெருங்கிய நட்பை கொண்ட நாடுகள் ஆகும். பாரம்பரியாக தொடரும் நட்பின் அடையளமாக, இன்று ரஷிய-இந்திய மக்கள் ரஷிய தூதரக அலுவலகத்தில் தங்களின் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர்.
'நாரி சக்தி' திட்டத்தின் கீழ் பெண்கள் தலைமையிலான இராணுவ அதிகாரிகளின் வீரமிக்க அணிவகுப்பு:
டெல்லி மகளிர் காவல் துறை சார்பில், உதவி ஆய்வாளர் ருயங்குநோவோ கென்ஸ் (Ruyangunuo Kense) தலைமை தாங்க நடந்த அணிவகுப்பு காணொளி:
இந்திய விமானப்படை சார்பில், பாரதிய வாயு சேனா பிரிவில், பெண்கள் தலைமை தாங்கும் படையின் அசத்தல் அணிவகுப்பு காணொளி இதோ. இந்த படைக்கு டேப்லோ கமாண்டர்கள் லெப்டினன்ட் அனன்யா சர்மா மற்றும் அஸ்மா ஷேக் ஆகியோர் தலைமை தாங்கினார்.
பிஎஸ்எப் (BSF) மகிளா காங்கிரஸ் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் அணிவகுப்பு:
இந்திய விமானப்படை அணிவகுப்பு ஸ்க்வாட்ரான் லீடர் ரஷ்மி தாக்கூர் தலைமையில் ஸ்க்வாட்ரான் லீடர் சுமிதா யாதவ், பிரதிதி அலுவாலியா மற்றும் லெப்டினன்ட் கிரித் ரோஹில் சார்பில் அணிவகுக்க பெண் சிங்கங்கள்:
262 ஃபீல்ட் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் பிரியங்கா சேவ்தா தலைமையிலான பீரங்கிப் படைப்பிரிவின் அணிவகுப்பு:
கடற்படையில் பெண் அதிகாரிகளின் பங்களிப்பை உறுதி செய்யும் அணிவகுப்பு:
சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு வணக்கம் செலுத்தும் பொருட்டு, கர்வத்யா பாதையில் பிரெஞ்சு வெளிநாட்டு படையணியின் 2 வது காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 30 இசைக்கலைஞர்கள் அணிவகுப்பு:
மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அரசு இராணுவத்தின் திறனை அதிகரிக்கும் பொருட்டு பெண்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கி, முப்படையிலும் பணியாற்ற வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதேபோல, அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு பின் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது இந்திய இராணுவ வலிமையை அதிகரிக்க உதவி செய்துள்ளது.