Centralized Employment Notification: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 22, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
ஜனவரி 22, சென்னை (Chennai News): ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்திய ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32438 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை நாளை தொடங்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 22, 2025 வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு மூலம் 1,036 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32,438 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. Republic Day Speech in Tamil: குடியரசு தின பேச்சுப் போட்டியில் கலந்துக் கொள்ள போறீங்களா? உங்களுக்கான கட்டுரை இதோ.!
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிட்ட பதவியின் அடிப்படையில் மாறுபடும், அதிகபட்ச வயது வரம்பு 36 ஆண்டுகள்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ PwBD – ரூ.250/-
மற்றவர்கள்: ரூ.500/- Duplicate Land Documents: சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டதா? உடனே இதை பண்ணுங்க..!!
எப்படி விண்ணப்பிப்பது?
- www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ RRB இணையதளத்தைப் பார்வையிடவும்.
- தனிப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க ஒரு முறை பதிவு செயல்முறையை முடிக்கவும்.
- உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- “Apply for RRB Ministerial and Isolated Category Teachers Vacancy 2025.” என்ற தலைப்பில் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
- துல்லியமான தனிப்பட்ட, கல்வி மற்றும் தொழில்முறை விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக அச்சிடப்பட்ட நகலை வைத்திருக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Computer-Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification (DV), Medical Examination (ME) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)