Document (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): உங்களின் சொத்துக்கள் விற்கவோ அல்லது அடகு வைக்கவோ வேண்டுமென்றால் அதற்கு அசல் பத்திரம் முக்கியமாகும். அசல் பத்திரம் இல்லாவிட்டால் சொத்து தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யமுடியாது. உங்களின் அசல் பத்திரம் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ அதன் நகலைப் பெற செய்ய வேண்டியவை.

FIR பதிவிடுதல்:

சொத்து தொடர்பான ஆவணங்கள் அல்லது பத்திரம் தொலைந்துவிட்டால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கை எனப்படும் FIR பதிவு செய்ய வேண்டும். பின் தொலைந்த ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் ஆய்வாளர் அழிக்கும் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த சான்றிதழ் புகார் அளித்து மூன்று மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ஆன்லைனில் புகார் அளித்துக் கொள்ளலாம். Black Turmeric Cultivation: மஞ்சளிலேயே செல்வம் சேர்க்கும் கருப்பு மஞ்சள்.. வளர்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

செய்தித்தாள் விளம்பரம்:

செய்தித்தாள்களில் சொத்தின் ஆவணங்கள் விவரங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களை உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அண்டர்டேக்கிங்:

சொத்து விவரங்கள், தொலைந்த ஆவணங்கள், எஃப்ஐஆர் நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பர நகல் ஆகியவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்து முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றிதளிக்கப்பட வேண்டும்.

நகல் பத்திர விண்ணப்பம்:

சொத்து பத்திரத்தின் நகலைப் பெற, சார் பதிவாளரிடம் எஃப்ஐஆர் நகல், செய்தித்தாள் விளம்பர நகல் , நோட்டரி அண்டர்டேக்கிங் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.பின் பத்திர நகல் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பின் சார்பதிவாளர் ஒப்புதலின் பேரில் நகல் பத்திரம் வழங்கப்படும்.