IPL Auction 2025 Live

Adani News: அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து பேரிடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்து கென்யா அரசு உத்தரவு.!

அரசுத்திட்டத்தை பெற, அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அமெரிக்காவால் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட கெளதம் அதானியின் பங்குகள், எதிர்கால முதலீடுகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Kenya Govt | Adani Groups (Photo Credit: Wikipedia / Facebook)

நவம்பர் 22, நைரோபி (World News): சூரிய மின்சக்தி ஒப்பந்த விவகாரத்தில், இந்திய அரசுத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி இலஞ்சம் கொடுத்து ரூ.61,000 மதிப்பிலான அரசின் திட்டத்தை பெற முயற்சித்ததாக இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி (Gautam Adani) உட்பட 7 பேரின் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அதன் பேரில் நடந்த விசாரணையில் இலஞ்ச விவகாரம் உறுதி செய்யப்பட்டது. 7 பேருக்கு ஏதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அடுத்தடுத்த சர்ச்சை:

இதனால் நேற்றில் இருந்து அதானி குழும (Adani Groups) பங்குகள் தொடர் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பங்குசந்தையில் மிகப்பெரிய பின்னடைவை மீண்டும் அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது. கடந்த 2023 ஹிண்டன்பர்க் அறிக்கையும் அதானி குழுமத்தை நேரடியாக ஊழல்களில் (Adani Bribery Case) மிகப்பெரியது என கூறி இருந்தது. Gautam Adani: அதானிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து வந்த ஆப்பு.. ரூ.2,100 கோடி இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம்.. பேரதிர்ச்சி.! 

கென்யா அரசு (Kenya Cancels Adani Investment) அறிவிப்பு:

இந்நிலையில், அதானி குழுமத்திற்கு பேரிடியாக, அந்நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படவிருந்த கென்யா முதலீடுகள் அனைத்தும் அந்நாட்டு அரசால் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. பல மில்லியன் டாலர் செலவில் கென்யாவில் இருக்கும் விமான நிலையம், பிற எரிசக்தி ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானி குழுமத்திற்கு எதிராக ரத்து செய்யப்பட்டு கென்யா அரசு அதிரடி காண்பித்துள்ளது.

Newyork Federal Court Accuses Gautam Adani (Photo Credit: @LiveLawIndia / Wikipedia Commons)

ஒப்பந்தங்கள் ரத்து:

கென்யாவின் அதிபர் வில்லியம் ரூடோ (President William Ruto) மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பெயரை சொல்லாமல், சர்ச்சை விவகாரத்தில் அதானி குழுமம் சிக்கிய காரணத்தால், அதன் முதலீடுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலைய விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு உட்பட பிற விஷயங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2.63 பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. CPR Treatment For Monkey: மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கு.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.., வீடியோ வைரல்..!

மேலும், அதானி குழும பங்குகள் பங்குசந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து சுமார் 25% இரக்கத்தை கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 2.5 இலட்சம் கோடி இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.