Mining Operators Case: கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி..!

கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Supreme Court of India (Photo Credit: httpsindiaai.gov.in)

ஜூலை 25, புதுடெல்லி (New Delhi): கடந்த 30 ஆண்டுகளாகவே கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க முடியுமா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) நிலுவையில் உள்ளது. 1989 மற்றும் 2004 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த இரண்டு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன. அதாவது 1989-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. 2004-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு vs கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் உச்சநீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுவிட்டது; ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்தது அத்தீர்ப்பு.

உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்: இந்த நிலையில் கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க உரிமை இல்லை என உத்தரவிடக் கூறி கனிமவள நிறுவனங்கள் (Mining Operators) உச்சநீதிமன்றத்தில் 80க்கும் மேற்பட்ட மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரிக்க 2011 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியை உள்ளடக்கிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. கனிம வளங்கள் மீதான மாநிலங்களின் உரிமை தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை இந்த பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தி வந்தது. Abhinav Bindra Awarded Olympic Order: ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது பெற்ற அபினவ் பிந்த்ரா.. பிரதமர் மோடி வாழ்த்து..!

வழக்கின் தீர்ப்பு: இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் அளிக்கப்பட்டது. அதில் ஒன்பது நீதிபதிகளில் எட்டு பேர் தனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தனர். மேலும் மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக மத்திய அரசிடம் இருந்து பெரும் ராயல் டீயை வரியாக கருத முடியாது, சுரங்கங்கள் தாதுக்கள் மேம்பாடு ஒழுங்குமுறை சட்ட விதிகளில் மாநில உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவுகள் இல்லை, ராயல்டி என்பது குத்தகை பணம், வரியல்ல என எத்தனை நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். நீதிபதி நாகரத்தினம் மட்டும் மாறுபட்ட தீர்ப்பினை அளித்தார்.