Fake News Alert: இருதரப்பு மோதல் குறித்து அவதூறு பரப்பியதாக சிக்கிக்கொண்ட வி.ஜே.. உண்மை அறியாமல் அவசரத்தால் நடந்த சம்பவம்.!

நடந்த உண்மையை மாற்றி கூறியதாக வி.ஜே மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட, களத்தில் இருந்து வந்ததாக கூறப்பட்ட தகவலை நம்பி பதிவிட்டவருக்கு சிக்கல் எழுந்தது.

RJ Sayema Jamvaramgarh incident Clips (Photo Credit: Twitter)

மார்ச் 29, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் அருகே நடந்த ஹிந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 12 பேர் கும்பலால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, சிறுபான்மை சமூகத்தினர் மீது புத்தாண்டை சிறப்பித்தவர்கள் தாக்குதல் நடத்தியாக பதிவுகள் வைரலாகின. இந்த தகவலை நம்பி ஆர்.ஜே சயமா என்பவரும் தனது கண்டனத்தை தெரிவிக்க, விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தின. Congo Mines: மடமடவென சரிந்த மணற்குவியல்.. நொடிப்பொழுதில் உயிர் தப்பித்த பணியாளர்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

இந்த நிலையில், களத்தில் உண்மையில் வேறொரு நிகழ்வு நடக்க, அதனை உறுதி செய்யாமல் அவர் பதிவிட்டதற்கு எதிராக பல கண்டனங்கள் குவிந்தன. இதனால் ஆர்.ஜே மேற்படியான செய்தியை வழங்கிய நபர் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்தி போலியான தகவலை பரப்பியவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ எடுக்கப்பட்டு இணையதளங்களில் வெளியாகி இரண்டு மாநிலங்களிடையே பிரச்னையை உருவாக்கிய நிலையில், அவை விசாரணைக்கு பின்னர் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்ட அவதூறு, சித்தரிப்பு காட்சிகள் என்பது அம்பலமாகின.